புகைப்பழக்கம்… ஆண்மைக்கு மட்டுமல்ல பெண்மைக்கும் பேராபத்து!

 

புகைப்பழக்கம்… ஆண்மைக்கு மட்டுமல்ல பெண்மைக்கும் பேராபத்து!

புகைப்பிடித்தல்… உடல் நலத்துக்குக் கேடு, புகைப்பிடித்தல் உயிரைக் கொல்லும்… இப்படிப்பட்ட விளம்பரங்களோடுதான் சிகரெட்டுகளும், பீடிகளும் விற்பனைக்கு வருகின்றன. நுரையீரலை கசக்கிப் பிழிந்தால் நிகோட்டின் நச்சுகள் சாக்கடைபோல கொட்டுவதுபோன்ற விளம்பரங்களைக் காட்டியும்கூட எவரும் திருந்தியபாடில்லை.

புகைப்பழக்கம்… ஆண்மைக்கு மட்டுமல்ல பெண்மைக்கும் பேராபத்து!
ஆண்மை – இசிகரெட்:
புகைப்பிடிப்பதால் இதய நோய், காச நோய் மட்டுமல்ல ஆண்மைக்கும் பெண்மைக்கும் கேடு நிகழும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியான பிறகும் இங்கே யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை `மாத்தி யோசி’ பாணியில் சிகரெட்டுக்கு அடிமையானவர்களை மீட்கிறோம் என்று சொல்லி இசிகரெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

வழக்கமான சிகரெட்டுகளிலிருந்து வெளிப்படும் புகையைப்போலவே இசிகரெட்டுகளில் இருந்தும் எலெக்ட்ரானிக் நிகோட்டின் புகை வெளியாகிறது. இது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்காது என்று சொல்லப்பட்டது. ஆனால், இந்த இசிகரெட் வழக்கமான சிகரெட்டைவிட 10 மடங்கு அதிக அளவில் புற்றுநோயை உண்டாக்கும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

புகைப்பழக்கம்… ஆண்மைக்கு மட்டுமல்ல பெண்மைக்கும் பேராபத்து!சமத்துவப் பெண்கள்:
ஆணுக்கு நிகராக பெண்களும் சமத்துவம் பேசிக்கொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐ.டி நிறுவனங்கள் மற்றும் மேலைநாட்டு நிறுவனங்களில் இரவுப்பணி பார்ப்போர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை பழகிவருகிறார்கள். புகைப்பிடிப்பதால் ஆண்களுக்கு காம உணர்வு குறைந்து ஆண்மை பறிபோவதைப்போல பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

சமத்துவம் பேசும் பெண்கள் புகைப்பிடிப்பதால் அவர்களுக்கும் ஆண்களைப்போல காம உணர்வு குறைகிறது. கூடவே கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. மாதவிடாய்ப் பருவம் சீக்கிரம் முடிந்து மெனோபாஸ் சீக்கிரமே தொடங்கிவிடுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதுமட்டுமல்ல பெண்ணுறுப்புகளில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

புகைப்பழக்கம்… ஆண்மைக்கு மட்டுமல்ல பெண்மைக்கும் பேராபத்து!புற்றுநோய்:
பெண்கள் புகைப்பிடித்தால்தான் இந்த பாதிப்புகள் வரும் என்று சொல்லமுடியாது. சிகரெட் பிடிப்பவர்களின் அருகே அமர்ந்திருக்கும்போது சுவாசித்தாலும் பாதிப்புகள் வரலாம் என்கிறது ஆய்வுகள். குறிப்பாக மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதாம். பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்று சொல்வதைப்போல இன்னொருவர் சுவாசித்தாலும் அருகே உள்ளவர்களைப் பாதிக்கும்.

புகைப்பிடிப்பதால் சம்பந்தப்பட்டவர் மட்டும் பாதிப்புக்குள்ளாவதில்லை. அவரது துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களும், உடன் பணிபுரிவோரும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. அந்தவகையில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு ஒரு சமூகத்தையே பாதிக்கிறது என்று சொன்னால் மிகையல்ல.