’ரிஷப் பண்ட்டை அவுட்டாக்க ஸ்மித் செய்த குறுக்கு வழி’ சேவாக் ஆவேசம்

 

’ரிஷப் பண்ட்டை அவுட்டாக்க ஸ்மித் செய்த குறுக்கு வழி’ சேவாக் ஆவேசம்

இந்தியா – ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கு இடையேனா டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை ருசித்துக்கொண்டன. ஐந்து நாட்களுக்கு முன் தொடங்கிய மூன்றாம் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றுவிடும் என்று நினைத்த பலரையும் வாயடைக்க வைத்தனர் இந்திய வீரர்கள்.

தங்கள் அற்புதமான, நிதானமான ஆட்டத்தால் இந்தப் போட்டியை ட்ராவக்கி விட்டனர். எனவே, இப்போது இந்தத் தொடர் இருவரும் சம நிலையில் இருக்கும் சூழலே நிலவுகிறது. மூன்றாம் டெஸ்ட் போட்டியில் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் பேட்டிங்தான்.

’ரிஷப் பண்ட்டை அவுட்டாக்க ஸ்மித் செய்த குறுக்கு வழி’ சேவாக் ஆவேசம்

மூன்றாம் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் 67 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இரண்டாம் இன்னிங்க்ஸில் 118 பந்துகளை மட்டுமே சந்தித்து 97 ரன்களை விளாசினார் ரிஷப் பண்ட். அதில் 12 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். ஒருநாள் போட்டி போல ரிஷப் பண்ட் ஆடியிருக்கா விட்டால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென்று உயர்ந்திருக்காது.

’ரிஷப் பண்ட்டை அவுட்டாக்க ஸ்மித் செய்த குறுக்கு வழி’ சேவாக் ஆவேசம்

ரிஷப் பண்ட்டின் ஆவேசமாக ஆட்டத்தை நிறுத்த ஆஸ்திரேலிய பவுலர்கள் எடுத்த பல முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தது. அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு குறுக்கு வழியைக் கையாண்டார். அதை இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ஆதாரத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஆவோசமாக கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

’ரிஷப் பண்ட்டை அவுட்டாக்க ஸ்மித் செய்த குறுக்கு வழி’ சேவாக் ஆவேசம்

சேவாக் பதிவிட்டிருக்கும் வீடியோவில், “ரிஷப் பண்ட் பேட்டிங் guard மார்க்கை அழித்துச் செல்கிறார் ஸ்டீவ் ஸ்மித். இப்படிச் செய்வதன் மூலம் ரிஷப் பண்ட் ஸ்டம்ப் இருக்கும் இடம் குழம்பி எல்.பி.டபுள்யூ விதமாக ஆடி ஆட்டமிழப்பார் என்று திட்டமிட்டார். ஆனால், ரிஷப் பண்டோ மீண்டும் தனது பேட்டை நிறுத்தி அம்பயரிடம் பேட்டிங் guard மார்க் பதிவிட்ட பிறகே பேட்டிங் ஆட தொடங்கிறார்.

ஸ்மித்தின் இந்த குறுக்கு வழிய நல்ல விளையாட்டு வீரருக்கு அழகு அல்ல. போட்டியின் அறத்தை சீர் குலைக்கும் செயல் என சேவாக்கின் பதிவுக்கு ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள். இப்படியான குறுக்கு வழிகளை மேற்கொண்டுதான் ரிஷப் பண்ட் சதமடிக்க முடியாமல் தடுத்தார்களோ என்ற சந்தேகமும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மீது எழுதுவது தவிர்க்க முடியாதது.