ஒரே சதத்தில் சச்சின், கோலி சாதனைகளை ஊதி தள்ளிய ஸ்மித்!

 

ஒரே சதத்தில் சச்சின், கோலி சாதனைகளை ஊதி தள்ளிய ஸ்மித்!

இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் சதமடித்ததன் மூலம் சச்சின், கோலி ஆகியோரின் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

கம்பேக்குக்கு என்று ஒரு உருவம் இருந்தால், அது நிச்சயமாக ஸ்டீவ் ஸ்மித் போல தான் இருக்கும். சச்சின கிரிக்கெட்டுக்காக பிறந்தவர்னு சொன்னா, ஸ்மித்த கம்பேக் கொடுக்கிறதுக்காகவே பிறந்தவர்னு சொல்லலாம். அப்படி தான் தற்போதும் கம்பேக் கொடுத்துள்ளார்.

இந்தியாவுடனான முதல் இரண்டு டெஸ்டின் நான்கு இன்னிக்ஸில் இரட்டை இலக்க ரன்களைக் கூட தொட முடியாமல் திணறிக் கொண்டிருக்க, வழக்கம்போல ஹேட்டர்ஸ் தங்களது ட்ரோல் ஆயுதத்தைக் கையிலெடுத்தார்கள். ஸ்மித்தை வறுத்தெடுத்துவிட்டார்கள். உள்ளபடியே இவையனைத்திற்கும் பேட்டால் பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஒரே சதத்தில் சச்சின், கோலி சாதனைகளை ஊதி தள்ளிய ஸ்மித்!

அதுமட்டுமில்லாமல் ஒரே சதத்தில் சச்சின், கோலி ஆகியோரின் சாதனைகளைத் தகர்த்தெறிந்துவிட்டார். மூன்றாவது டெஸ்டில் அவர் அடித்த சதம் 27ஆவது சதமாகும். இதன்மூலம் மிகக் குறைந்த இன்னிங்ஸில் விரைவாக 27 சதமடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.

இதற்கு முன் சச்சின் 141 இன்னிங்ஸில் 27 சதமடித்திருந்தார். அந்த இலக்கை ஸ்மித் 136 இன்னிங்ஸிலேயே நெருங்கிவிட்டார். 70 இன்னிங்ஸில் 27 சதமடித்து டான் பிராட்மேன் முதலிடத்தில் இருக்கிறார்.

ஒரே சதத்தில் சச்சின், கோலி சாதனைகளை ஊதி தள்ளிய ஸ்மித்!

அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். மூன்றாவது டெஸ்டில் கோலியின் 7 ஆயிரத்து 318 ரன்களைச் சமன் செய்த ஸ்மித் தற்போது 7 ஆயிரத்து 368 ரன்கள் எடுத்து சாதனை செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் எட்டு சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர்களான விவியன் ரிச்சர்ஸ், ரிக்கி பாண்டிங், கார்பீல்ட் சோபெர்ஸ் ஆகியோர் வரிசையில் ஸ்மித் இணைந்துள்ளார்.