2020ம் ஆண்டில் விட்டதை பிடிக்க தயாராகும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் !

 

2020ம் ஆண்டில் விட்டதை பிடிக்க தயாராகும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் !

நடப்பாண்டில் ஸ்மார்ட்போன் வளர்ச்சி கடும் வீழ்ச்சியை கண்ட நிலையில், வரும் ஆண்டில், இரட்டை இலக்க வளர்ச்சி கண்டு ஸ்மார்ட்போன் துறைக்கு பொற்காலமாக இருக்கும் என தொழில்துறை கணிப்புகள் கூறியுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே, உலகம் முழுவதும் கொரோனா அலை தொடங்கிய நிலையில், ஒவ்வொரு நாடுகளும் படிப்படியாக ஊரடங்கு நடைமுறையை அமல்படுத்தின. இதனால் ஏற்றுமதி வர்த்தகம், உள்நாட்டு வர்த்தகம் முடங்கிய நிலையில், அனைத்து தொழில்களும் கடும் தேக்கம் கண்டன. இந்த நிலையில், ஸ்மார்ட்போன் விற்பனையிலும் கடும் பின்னடைவு ஏற்பட்டது.

2020ம் ஆண்டில் விட்டதை பிடிக்க தயாராகும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் !

ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பின்னர் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, தொழில்துறை மெல்ல ஏற்றம் கண்டு வருகிறது. இதையடுத்து கடும் தேக்கத்தில் இருந்த ஸ்மார்ட்போன் விற்பனையும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த விற்பனை வரும் ஆண்டில் மேலும் அதிகரித்து இரட்டை இலக்க வளர்ச்சியை தொடும் என கூறப்படுகிறது. குறிப்பாக வெப் சீரியல் வளர்ச்சி காரணமாக ஸ்மார்ட்போனில் அவற்றை பார்க்கும் வகையிலும், செல்பி கேமரா என இரண்டு அம்சங்கள் கொண்ட போன்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும். குறிப்பாக 6 அங்குல தொடுதிரை போன்களுக்கு வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.

2020ம் ஆண்டில் விட்டதை பிடிக்க தயாராகும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் !

இந்த ஆண்டு, ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஏற்பட்ட தேக்கம், பொருள் போக்குவரத்து முடக்கம் காரணமாக செல்போன், டிவி உள்ளிட்ட மின்னணு பொருட்கள் தயாரிப்பின் மூலப்பொருளான பேனலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இவற்றை அதிக அளவில் உற்பத்தில் செய்து வரும் நாடு சீனாதான். அங்கிருந்து இறக்குமதி செய்ய உலக நாடுகள் தடை விதித்ததால் செல்போன் தயாரிப்பு முடங்கியது. இதனால் இந்திய செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்திருந்தன.

இலக்கை எட்டாத நிறுவனங்கள்!

கொரோனா அலை ஓய்ந்தால் செல்போன் விற்பனை 5 கோடி போன்களை தொடும் என நிறுவனங்கள் எதிர்பார்த்தன. ஆனால், பொருளாதார மந்த நிலை காரணமாக அந்த இலக்கை நிறுவனங்கள் எட்டவில்லை. சுமார் 6 சதவீத விற்பனைச் சரிவை கண்டுள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு கணிப்பின்படி, வரும் ஆண்டில் இந்தியாவில் செல்போன் விற்பனை 20 சதவீத இலக்கை எட்டும் என கூறப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டில் விட்டதை பிடிக்க தயாராகும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் !

பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து வரும் ஆண்டில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ, குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டுவர உள்ளதும் இந்த துறையின் வளர்ச்சியை வேகப்படுத்த உள்ளது.

களமிறங்கும் புதிய தயாரிப்புகள்

இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளரான மைக்ரோமேக்ஸ் புதிய மாடல்களுடன் அடுத்த ஆண்டு வலம்வர திட்டங்களை வைத்துள்ளது. ஜியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா அலைக்கு பின்னரான நியு நார்மல் வாழ்க்கை முறைக்கு ஏற்ப புதிய உத்திகளுடன், புதிய சந்தைப்படுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. சாம்சங் நிறுவனம் தங்களது சில்லரை விற்பனையாளர்கள் நெட்வொர்க்கை தற்போது பலப்படுத்து வருகிறது. இது தவிர நோக்கியா நிறுவனம், புதிய மாடல்கள், லேப்டாப் என களம் இறங்கி உள்ளது.

2020ம் ஆண்டில் விட்டதை பிடிக்க தயாராகும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் !

இந்த எதிர்பார்ப்பினை சாத்தியமாக்கும் வகையில், விற்பனை சந்தையையும் நிறுவனங்கள் பலப்படுத்தி வருகின்றன. பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களில் மின்னணு பொருட்கள் மற்றும் செல்போன் விற்பனை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சீன பொருட்களை புறக்கணிப்போம் என இந்தியாவில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அரசும் இந்திய தயாரிப்புகளை ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால் வரும் ஆண்டில் செல்போன் விற்பனை அமோகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டில் விட்டதை பிடிக்க தயாராகும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் !

இந்த விற்பனை வளர்ச்சிக்கு ஏற்ப, சில ஸ்மார்ட்போன்களின் விலையும் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் அது எவ்வளவு குறையும் என்பதை மட்டும் ஆய்வுகள் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக வரும் ஆண்டில் ஸ்மார்ட்போன் துறைக்கு பொற்காலம் என்றே பார்க்கப்படுகிறது!