”விரைவில் ஸ்மார்ட் டிவி – ஒப்போ அறிவிப்பு ! 55 மற்றும் 65 இன்ச் டிவிக்கள் அறிமுகம்? !

 

”விரைவில் ஸ்மார்ட் டிவி – ஒப்போ அறிவிப்பு !  55 மற்றும் 65 இன்ச் டிவிக்கள் அறிமுகம்? !

செல்போன் உற்பத்தி நிறுவனமான ஒப்போ, விரைவில் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

செல்போன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவி உற்பத்தியிலும் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் நோக்கியா, சியோமி, ரியல்மி, மோட்டோரோலா, ஒன்பிளஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவி சந்தையில் ஏற்கனவே களம்கண்டுவிட்டன. இந்நிலையில் தற்போது புதிய வரவாக ஒப்போ நிறுவனமும் இந்த பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.

”விரைவில் ஸ்மார்ட் டிவி – ஒப்போ அறிவிப்பு !  55 மற்றும் 65 இன்ச் டிவிக்கள் அறிமுகம்? !

அதன்படி வரும் அக்டோபரில் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த உள்ளதாக ஒப்போ நிறுவனம் அறவித்துள்ளது. அதே சமயம் அந்த டிவியின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து ஒப்போ தகவல் ஏதும் தெரிவிக்க வில்லை. இருந்தபோதிலும் ஒப்போ நிறுவனம் 55 மற்றும் 65 இன்ச் ஆகிய இரண்டு அளவுகளில் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அந்த டிவியில் எண்ணற்ற ஸ்மார்ட் ஆப்ஷன்கள் இருக்கும் என்றும், பல அதிநவீன வசதிகள் மற்றும் சிறந்த திரை அமைப்பு கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. பல ஒடிடி தளங்களுக்கான செயலிகள் மற்றும் கூடுதலாக பல புதுமையான வசதிகள் அடங்கப்பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

”விரைவில் ஸ்மார்ட் டிவி – ஒப்போ அறிவிப்பு !  55 மற்றும் 65 இன்ச் டிவிக்கள் அறிமுகம்? !

இந்திய செல்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளதால் இந்தியாவிலும் தனது ஸ்மார்ட் டிவியை ஒப்போ அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய டிவி சந்தையில் பல நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், ஒப்போ நிறுவனத்தின் வருகை, டிவி விற்பனை சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • எஸ். முத்துக்குமார்