கண்களை ஈர்க்கும் “ரோபோ பூனைக்குட்டி”

 

கண்களை ஈர்க்கும் “ரோபோ பூனைக்குட்டி”

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வான்கார்டு இண்டஸ்ட்ரீஸ் என்கிற நிறுவனம் செல்லப்பிராணி வடிவில் கையடக்கமான ரோபோ வை உருவாக்கி வருகிறது. “மொஃப்லின்” என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை, சிறிய பூனைக் குட்டியை கைகளில் வைத்துக் கொள்ளவது போல அடக்கி விடலாம். படுக்கையில்கூட செல்லப்பிராணி இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த ரோபாவை வாங்கிக் கொள்ளலாம்.

கண்களை ஈர்க்கும் “ரோபோ பூனைக்குட்டி”

செல்லப்பிராணிகளில் தலையை வருடிக் கொடுப்பது போல, இந்த ரோபோவை தடவிக் கொடுக்கும்போது , அது அசைந்து நெளிந்து இருப்பை வெளிப்படுத்தும். கூடவே இந்த ரோபோவுக்கு எந்த ‘வாய்ஸ்’ வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

கண்களை ஈர்க்கும் “ரோபோ பூனைக்குட்டி”

காலையில் அலாரம் அடிக்க வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம், அல்லது செல்ல பிராணி சீண்டுவது போல ஒலியை ‘செட்’ செய்து விட்டால் படுக்கையில் உங்களை ஒலித்து சீண்டும். புசுபுசுவென முடியுடன் அழகிய பூனைக்குட்டி அல்லது உயர் ரக சிறிய நாய்குட்டிபோல இருக்கும் இந்த ‘மொஃப்லின்’ ரோபா பார்ப்பவர்கள் கண்களை நிச்சயம் ஈர்த்து விடும்.

கண்களை ஈர்க்கும் “ரோபோ பூனைக்குட்டி”

இதை வர்த்தக ரீதியில் தயாரிப்பதாக நிதி திரட்டும் முயற்சிகளில் அந்த நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் இறங்கியது. இந்த மாதத்துடன் நிதி திரட்டுவது முடியும் என்றும் அடுத்த ஆண்டிலிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.