ஜூலை 1 முதல் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு

 

ஜூலை 1 முதல் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு

வரும் ஜூலை 1ம் தேதி முதல் சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய சேமிப்பு பத்திரம், கிஷான் விகாஸ் பத்திரம் மற்றும் பி.பி.எப். உள்ளிட்ட அனைத்து சிறுசேமிப்புளுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கு சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு அடுத்த மாதம் வெளியிட உள்ளது.

ஜூலை 1 முதல் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
வட்டி விகிதம் குறைப்பு

இந்த சூழ்நிலையில் வரும் ஜூலையில் சிறுசேமிப்புகளுக்காக வட்டியை மத்திய அரசு குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரந்த பொருளாதாரத்தில் கடன் வாங்கும் செலவினை (குறைந்த வட்டியில் கடன் வாங்கல்) குறைப்பதற்கும், நிலையான வளர்ச்சியின் பாதையில் திரும்புவதற்கும் நிதி மற்றும் நாணய ஆதரவு தேவை என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஜூலை 1 முதல் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
இந்திய ரிசர்வ் வங்கி

தேசிய சேமிப்பு பத்திரம், கிஷான் விகாஸ் பத்திரம் மற்றும் பி.பி.எப். உள்ளிட்ட அனைத்து சிறுசேமிப்புளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வங்கிகள் மற்றும் ரிசர்வ வங்கியின் ஆதரவாக உள்ளன. இது தொடர்பாக நிபுணர் ஒருவர் கூறுகையில், சிறு சேமிப்புகளுக்கான வட்டி அடுத்த மாதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது ஏனெனில் தற்சமயத்துக்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நமக்கு இல்லை என தெரிவித்தார்.