இலங்கைக்கு எதிரான 2வது டி20: இந்தியா திணறல்

 

இலங்கைக்கு எதிரான 2வது டி20: இந்தியா திணறல்

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் குர்ணல் பாண்டியாக்கு கொரனா தொற்று ஏற்பட்டதால் நேற்றைய போட்டி தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கு எதிரான 2வது டி20: இந்தியா திணறல்

இந்நிலையில் குர்ணல் பாண்டியா உடன் அருகிலிருந்தவர்கள் என்ற முறையில் ஹர்திக் பாண்டியா,இஷன் கிஷன்,சூர்யகுமார் யாதவ்,பிரத்திவி சா, கிருஷ்ணப்பா கவுதம், மணிஷ் பாண்டே மற்றும் சாகல் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் கொரனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது 2வது டி20 போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட்,தேவ்தட் படிக்கல்,நிதிஷ் ரானா,சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் புதுமுகவீரர்கள் ஆக வாய்ப்பு பெற்றனர்.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் களமிறங்கினார். ஆரம்பம் முதலே இந்திய அணி நிதானமாக விளையாடியது,ருத்துராஜ் கெய்க்வாட் 18 ரன்களில் அவுட் ஆக , தவான் 42 பந்துகளை சந்தித்து 40 ரன்கள் மட்டுமே எடுத்தார்.அடுத்து வந்த தேவ்தட் படிக்கல் தன் பங்குக்கு 21 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் ரன் ரேட் சரிந்தது. ஆரம்பம் முதலே ரன்ரேட் குறைவாக இருந்ததாலும் இந்திய அணியில் 5 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருந்ததாலும் இந்திய அணியால் ரன் ரேட்டை உயர்த்த முடியவில்லை.20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அகிலா தனஞ்சயா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.