Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் எட்டு மணி நேரம் கேரண்டியான தூக்கம் தரும் எட்டு பொருட்கள் .

எட்டு மணி நேரம் கேரண்டியான தூக்கம் தரும் எட்டு பொருட்கள் .

எட்டு மணி நேரம் கேரண்டியான தூக்கம் தரும் எட்டு பொருட்கள் .

ஒரு மனிதனுக்கு தூக்கம் கெட்டால் ,அது தீவிர மன அழுத்தத்தை உண்டு பண்ணி ,உடலில் பல நோய்களுக்கு வழி வகுக்கும் .அதனால் குறைந்தது எட்டு மணி நேரம் தூக்கம் நம் உடலுக்கு அவசியம் .செல்போன் பயன்பாட்டால் இன்றைய இளைஞர்களால் சரியாக தூங்க முடிவதில்லை .

எட்டு மணி நேரம் கேரண்டியான தூக்கம் தரும் எட்டு பொருட்கள் .

அது மட்டுமல்லாமல்  மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களும் இந்த தூக்கமின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணம்.

ஆனால் இரவில் தூங்கும் முன் ஒருசில பானங்களை குடித்தால், செரிமான பிரச்சனைகள் இல்லாமல் நல்ல அமைதியான மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்..அதுமட்டுமின்றி, மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடனும் இருக்கக்கூடும் என்றும் சொல்கின்றனர்.

இதற்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்னவெனில்  இரவில் காபி குடிக்கக்கூடாது. ஏனென்றால் காபி தூக்கத்தைக் கலைத்து, சுறுசுறுப்புடன் இருக்கச் செய்யும்.அதேப்போல் சர்க்கரையையும் அதிகம் சேர்க்கக்கூடாது, இதுவும் தூக்கத்தைக் கலைத்துவிடும் என்று கூறுகின்றனர்

மேலும்  இரவில் படுக்கும் முன் எந்த பானத்தைக் குடித்தால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்று இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

புதினா டீ

நல்ல வெதுவெதுப்பான நீரில் புதினாவைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து தேன் கலந்து குடித்தால், இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

சீமைச்சாமந்தி டீ

சர்க்கரை சேர்க்காத சீமைச்சாமந்தி டீயை இரவில் படுப்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடித்தால், நரம்புகள் தளர்ந்து, மன அழுத்தம் குறைந்து, நல்ல தூக்கத்தைப் பெற முடியும்.

வெதுவெதுப்பான பால்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, இரவில் படுக்கும் முன் குடித்து வர, உடல் நன்கு ரிலாக்ஸ் ஆகி, ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.

பாதாம் பால்

பாலில் உள்ள வைட்டமின் ஈ, இரவில் இனிமையான தூக்கத்தைப் பெற உதவும். அதிலும் பாதாம் பாலை டின்னர் முடிந்து குடித்து, 1 மணிநேரம் கழித்து தூங்கினால், நன்கு தூக்கம் வரும்.

தேன்

வெதுவெதுப்பான பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், இரவில் தூக்கம் சீக்கிரம் வருவதோடு, மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வீர்கள்.

இஞ்சி டீ

இஞ்சி டீயை இரவில் குடித்தால், உணவுகள் எளிதில் செரிமானமாகி, செரிமான பிரச்சனைகளின்றி நல்ல ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

சுக்கு

வாழைப்பழங்கள்:

வாழைப்பழத்தில் டிரிப்டோபான் உள்ளது மற்றும் பழமே மெக்னீசியத்தின் ஒரு சாதாரண மூலமாகும். இந்த இரண்டு பண்புகளும் உங்களுக்கு நல்ல இரவு தூக்கத்தைப் பெற உதவும்

ஓட்ஸ்:

அரிசியைப் போலவே, ஓட்மீல் சற்று அதிக நார்ச்சத்துள்ள கார்ப்ஸில் அதிகமாக உள்ளது மற்றும் படுக்கைக்கு முன் உட்கொள்ளும்போது தூக்க மயக்கத்தைத் தூண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஓட்சில்  மெலடோனின்  இருப்பதால் இது தூக்கம் வரவைக்கும் .

மேற் சொன்ன குறிப்புகளை பின்பற்றினால் நல்ல தூக்கம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் ,உடலும் ஆரோக்கியயமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் .

எட்டு மணி நேரம் கேரண்டியான தூக்கம் தரும் எட்டு பொருட்கள் .
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மகாராஷ்டிராவை சூறையாடும் கனமழை; 136 பேர் மரணம்!

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட மழை பாதிப்புகளால் நேற்று மாலை வரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது....

தமிழ்நாட்டில் நூலகங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவு!

போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பொது நூலகங்கள் இன்று முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கணவனை ஏமாற்றிவிட்டு… புதுமணப்பெண்ணை கடத்திய தோழி!

ஆம்பூர் அருகே திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன புதுமணப்பெண் அவரது தோழியால் கொல்கொத்தா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில்...

ஒரேநாளில் 546 பேர் உயிரிழப்பு…தினசரி அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தம் 3,13,32,159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- Advertisment -
TopTamilNews