இந்துக்கடவுள் குறித்து அவதூறு : மன்னிப்பு கேட்டார் மதபோதகர் மோகன் சி லாசரஸ்

இந்துக்கடவுள் குறித்து அவதூறு : மன்னிப்பு கேட்டார் மதபோதகர் மோகன் சி லாசரஸ்

இந்து கடவுள்களை அவதூறாக பேசிய மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்துக்கடவுள் குறித்து அவதூறு : மன்னிப்பு கேட்டார் மதபோதகர் மோகன் சி லாசரஸ்

இயேசு விடுவிக்கிறார் என்ற அமைப்பை நடத்தி வருபவர் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை ஆவடியில் நடந்த மத போதனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் இதுகுறித்து பல வழக்குகள் இவர் மீது பதியப்பட்டன. தன் மீதுள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யக்கோரி மோகன் சி லாசரஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

இந்துக்கடவுள் குறித்து அவதூறு : மன்னிப்பு கேட்டார் மதபோதகர் மோகன் சி லாசரஸ்

மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மனுதாரர் தரப்பில் இருந்து இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க தயாரா? என்று கேள்வி எழுப்பினார். உடனே மோகன் சி லாசரஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் , இந்து கடவுள்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்றும் அவர் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிற மதங்களை இழிவு படுத்தக் கூடாது என இயேசுநாதர் கூறியிருக்கிறார்.

இந்துக்கடவுள் குறித்து அவதூறு : மன்னிப்பு கேட்டார் மதபோதகர் மோகன் சி லாசரஸ்

மதபோதகர்கள் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி, அப்படி இல்லாவிட்டால் மதச்சார்பின்மை கொள்கைக்கு ஆபத்தாகிவிடும். ஒற்றுமை ,கலாச்சாரம், பண்பாட்டை காக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை என்று அறிவுறுத்தினார். அத்துடன் மனுதாரர் மோகன் சி லாசரஸ் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டதால் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்வதாகவும் அவர் உத்தரவிட்டார்.