#SK15 : நாளை பூஜையுடன் துவங்குகிறது சிவகார்த்திகேயனின் பொலிட்டிக்கல் திரில்லர்

இரும்புத்திரை பட இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே 15 திரைப்படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது.

சென்னை: இரும்புத்திரை பட இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே 15 திரைப்படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படம் SK 15. இதில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் நாச்சியார் படத்தில் நடித்த இவானா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கின்றனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கத்தி, ராஜா ராணி உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜார்ஜ் சி வில்லியம் முதன்முறையாக சிவகார்த்திகேயன் உடன் இதில் பணிபுரிய உள்ளார். இது ஒரு பொலிட்டிக்கல் திரில்லர் படமாய் உருவாக உள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளது. இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த அர்ஜுன், இதிலும் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படத்தின் பூஜை நாளை நடைபெறவுள்ளது. இதில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு தொடர்ந்து பத்து நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு திருப்போரூர் எஸ்.எஸ்.என் கல்லூரியில் துவங்குகிறது. இந்த படத்தை அறம், ஐரா படங்களை தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் (Kjr studios) நிறுவனம் தயாரிக்கின்றது.

Most Popular

ஜூன் காலாண்டில் ரூ.32 கோடி லாபம் ஈட்டிய மும்பை பங்குச் சந்தை..

நாட்டின் முன்னணி பங்குச் சந்தைகளில் ஒன்றான மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) தனது கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் மும்பை பங்குச் சந்தையின் நிகர லாபம்...

சித்தராமையா உடல் நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை தகவல்.. தொண்டர்கள் நிம்மதி

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தது. இதனையடுத்து அவருக்கு உடனடியாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவ்வாக வந்தது....

ராமர் கோயில் பூமி பூஜை ஜனநாயகத்தின் மரணம் என்ற காமெடியன் குணால் கம்ரா.. பதிலடி கொடுத்த டிவிட்டர்வாசிகள்..

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா. அவர் காமெடியனாக இருந்தாலும் விரும்பதகாத சர்ச்சைகளில் சிக்குவது தற்போது சகஜமாகி வருகிறது. நேற்று அயோத்தியில் நடந்த ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை...

சுஷாந்த் மரண வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு! எனது பொறுப்பை நிறைவேற்றிவிட்டேனா? சுப்பிரமணியன் சுவாமி

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது இந்திய திரைப்பட உலகில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கான...