முதல்வர் கெலாட் எங்களை மனரீதியாக துன்புறுத்துகிறார்.. குஜராத்துக்கு ஒடிய ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்

முதல்வர் கெலாட் எங்களை மனரீதியாக துன்புறுத்துகிறார்.. குஜராத்துக்கு ஒடிய ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்

சச்சின் பைலட்டும் மற்றும அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டது முதல் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தினந்தோறும் ஏதாவது அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களை விலை வாங்க பா.ஜ.க. குதிரை பேரம் நடத்துவதாக முதல்வர் அசோக் கெலாட் முதலில் குற்றம் சாட்டினார். மேலும், தனது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஹோட்டலில் தகுந்த பாதுகாப்புடன் தங்க வைத்துள்ளார்.

முதல்வர் கெலாட் எங்களை மனரீதியாக துன்புறுத்துகிறார்.. குஜராத்துக்கு ஒடிய ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்

இந்த சூழ்நிலையில் திடீர் திருப்பமாக, நேற்று, முதல்வர் அசோக் கெலாட் தங்களை மனரீதியாக துன்புறுத்திகிறார் ஆகையால் நாங்கள் 2 நாள் பயணமாக குஜராத் செல்கிறோம் என பா.ஜ.க. எம்.எல்,ஏ.க்கள் 6 பேர் சென்று விட்டனர். இது குறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிர்மல் குமாவாத் போர்பந்தர் விமான நிலையத்தக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராஜஸ்தானில் அதிகளவில் அரசியல் நடவடிக்கைகள் நிகழ்கிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு பெரும்பான்மை பலம் இல்லை மற்றும் அரசு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை மனரீதியாக துன்புறுத்துகிறது.

முதல்வர் கெலாட் எங்களை மனரீதியாக துன்புறுத்துகிறார்.. குஜராத்துக்கு ஒடிய ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்

நான் உள்பட மொத்தம் 6 பேர் 2 நாள் பயணமாக குஜராத் வந்துள்ளோம். சோம்நாத் கோயிலில் தரிசனம் செய்ய வந்துள்ளோம். எங்களுடன் மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் இணைந்து கொள்வர். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி அழுத்தம் கொடுக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்க உள்ளது. அதுவரை ராஜஸ்தான் அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.