பொய்சொல்லும் மத்திய அரசின் மீது வழக்கு தொடர வேண்டும் – சிவசேனா எம்.பி காட்டம்!

 

பொய்சொல்லும் மத்திய அரசின் மீது வழக்கு தொடர வேண்டும் – சிவசேனா எம்.பி காட்டம்!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறிய மத்திய அரசின் மீது வழக்கு தொடர வேண்டுமென சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இது தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி வேணுகோபால் கேள்வி எழுப்பினார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர், ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கொடுத்த தகவலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக பதிவாகவில்லை என தெரிவித்தார்.

பொய்சொல்லும் மத்திய அரசின் மீது வழக்கு தொடர வேண்டும் – சிவசேனா எம்.பி காட்டம்!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியாவில் பலர் உயிரிழந்த நிலையில் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்த இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதைக் கேட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன. இந்த நிலையில் இது குறித்து பேசிய சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், மத்திய அரசின் பதிலால் வாயடைத்துப் போய் விட்டேன். இதையெல்லாம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களில் குடும்பங்கள் கேட்டால் என்ன ஆவார்கள். பொய் சொல்லும் அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர வேண்டும் என்று காட்டமாக தெரிவித்தார்.

மேலும் பெகாசஸ் விவகாரம் குறித்து பேசிய அவர், பெகாசஸ் விவகாரத்தில் உண்மை வெளிவரட்டும். மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் மத்திய அரசு இதற்காக ஏன் பயப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.