உத்தரகாண்ட் எஸ்கேப் ஆன சிவசங்கர் பாபாவுக்கு ஸ்கெட்ச் போட்ட தமிழ்நாடு காவல் துறை!

உத்தரகாண்ட் எஸ்கேப் ஆன சிவசங்கர் பாபாவுக்கு ஸ்கெட்ச் போட்ட தமிழ்நாடு காவல் துறை!

பத்ம ஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்குப் பின் பல பள்ளி மாணவிகளும் தைரியமாக புகார் கொடுக்க முன்வந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திலுள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர். ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொள்ளும் இவர் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் சோசியல் மீடியாவில் புகார் தெரிவித்தனர்.

உத்தரகாண்ட் எஸ்கேப் ஆன சிவசங்கர் பாபாவுக்கு ஸ்கெட்ச் போட்ட தமிழ்நாடு காவல் துறை!

அதன் அடிப்படையில் விசாரிக்க தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், நிறுவனர் சிவசங்கர், அவரின் வழக்கறிஞர் நாகராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியர், மூன்று ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சிவசங்கருக்கு பதிலாக அவர் சார்பாக ஜானகி என்பவர் ஆஜராகினார்.

உத்தரகாண்ட் எஸ்கேப் ஆன சிவசங்கர் பாபாவுக்கு ஸ்கெட்ச் போட்ட தமிழ்நாடு காவல் துறை!

நெஞ்சுவலி காரணமாக சிவசங்கர் பாபா உத்தரகாண்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என ஜானகி தெரிவித்திருந்தார். அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார். இதையடுத்து சிவசங்கர் பாபா மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்ப தகவல் சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உத்தரகாண்ட் எஸ்கேப் ஆன சிவசங்கர் பாபாவுக்கு ஸ்கெட்ச் போட்ட தமிழ்நாடு காவல் துறை!

இந்த புகார் குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம்செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் வேறொரு மாநிலத்திற்கு சென்று விசாரணை நடத்த ஏதுவாக சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.