சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் வீட்டை பூட்டிவிட்டு தப்பியோட்டம்!

 

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் வீட்டை பூட்டிவிட்டு  தப்பியோட்டம்!

சிவசங்கர் பாபா மீதான பாலியல் தொல்லை வழக்கில் அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு எடுத்த நிலையில் அவர்கள் தப்பியோடியது தெரியவந்துள்ளது .

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் வீட்டை பூட்டிவிட்டு  தப்பியோட்டம்!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா. முன்னாள் மாணவிகள் 18 பேர் பாலியல் புகார் கொடுத்த நிலையில் சிவசங்கர் பாபா மீது 3 போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்தது . வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகள் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்ட நிலையில் அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவெடுத்தது.

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் வீட்டை பூட்டிவிட்டு  தப்பியோட்டம்!

இந்நிலையில் சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்றபோது சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் தப்பி ஓட்டம் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகளை 5 பேருக்கு சம்மன் அளிக்க சென்றபோது உண்மை தெரியவந்துள்ளது.மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தர உதவியதாக பள்ளி ஆசிரியைகள் 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஆசிரியை காயத்ரி மற்றும் அங்கு பணிபுரியும் பிரவீனா உள்ளிட்டோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க சம்மனை வாங்காமல் தலைமறைவாகியுள்ளனர்.சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதால் அவர்கள் விரைவில் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.