சிவகாசி பட்டாசு ஆலை விபத்து :உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து :உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி!

சிவகாசி, சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இருக்கும் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 12ம் தேதி ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில நாட்களிலேயே காக்கிவாடன் பட்டியில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து :உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி!

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை மீண்டும் காளையார் குறிச்சியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில், 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாதத்திலேயே சிவகாசியில் 3 வெடி விபத்து நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து :உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி!

இந்த நிலையில், சிவகாசி காளையார் குறிச்சி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.