kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


சீனாவில் சிவகார்த்திகேயனின் ‘கனா’?

kanaa
kanaa
Loading...

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘கனா’ திரைப்படம் சீனாவில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த டிச.21ம் தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. பெண்கள் கிரிக்கெட்டையும், விவசாயத்தையும் மையப்படுத்தி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாதிக்கத் துடிக்கும் இளம் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ள இப்படத்தை காண இளம் பெண்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதுகிறது.

kanaa

இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து நாளை கேரளாவில் ‘கனா’ திரைப்படம் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், விளையாட்டு சார்ந்த திரைப்படங்களுக்கு சீனா போன்ற நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளதால், ‘கனா’ திரைப்படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மல்யுத்தத்தை மையமாகக் கொண்டு உருவான அமீர்கானின் ‘தங்கல்’ திரைப்படம் சீனாவில் ரிலீசாகி சுமார் ரூ.1000 கோடி வரை வசூலித்தது.

சீனாவில் கிரிக்கெட் விளையாட்டு இல்லை என்றாலும், ஏழை பெண், விளையாட்டுத் துறையில் முன்னேறிய கதையம்சம் கொண்ட ‘கனா’ திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ‘கனா’ படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.