புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு உதவிய சிவகார்த்திகேயன்

 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு உதவிய சிவகார்த்திகேயன்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்துள்ளார்.

காமெடி நடிகர் தவசி, இவர் அழகர் சாமியின் குதிரை, நான் கடவுள், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது மீசையால் குறுகிய காலத்தில் பிரபலமான தவசி சமீபத்தில் காலில் அடிபட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். இதை தொடர்ந்து நலமுடன் வீடு திரும்பிய அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு உதவிய சிவகார்த்திகேயன்

அதாவது நடிகர் தவசிக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்பட்டது. ஏற்கனவே வறுமையில் வாடி வந்த அவர் புற்றுநோயால் உடல் மெலிந்து பரிதாபமாக இருக்கிறார். இவருக்கு நடிகர் சூரி ரூ. 20 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ள நிலையில் திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன், தனது சரவணா மருத்துவமனையில் தவசிக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அத்துடன் அவரின் மருத்துவ செலவுகளை தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு உதவிய சிவகார்த்திகேயன்

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளார். சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு தந்தையாக தவசி நடித்திருந்தார். அதில் கருப்பனுக்கு குசும்பு என்ற வசனம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.