மக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்

 

மக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்

கலைமாமணி விருது வாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், “இன்றைக்கு சினிமாவில் பெரிய கதாநாயகனாக ஆவேன் என்பது கனவு என்று சொன்னாலே அது பொய். நான் சினிமாவில் இருக்க ஆசைப்பட்டேன். கதாநாயகன் அந்தஸ்து கொடுத்து, நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்து இன்றைக்கு கலைமாமணி என்ற மிகப்பெரிய விருதையும் கொடுத்துள்ளார்கள். இந்த விருதுக்கு இன்னும் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதைத் தாண்டி பயங்கரமாக யோசிக்கவில்லை. அடுத்த படம் நன்றாக ஓட வேண்டும், இன்னும் நல்ல நடிக்க வேண்டும் என்பது மட்டுமே மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.

மக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்

நானும் இளம் நடிகர் தான். கஷ்டப்பட்டு உடம்பை எல்லாம் குறைத்துள்ளேன். என்னாலேயே முடியும் போது, உங்களாலும் முடியும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். எனக்கு எதில் எல்லாம் புரிதல் இருக்கிறதோ, எதுவெல்லாம் சரியென்று படுகிறதோ நிச்சயமாகச் சொல்லிக் கொண்டுதான் இருப்பேன். சமுதாயப் பிரச்சினைகள் நிறைய உள்ளன. அதில் சிலவற்றை வேலைக்காரன், ஹீரோ, கனா மாதிரியான படங்களில் முடிந்தளவுக்கு சொல்றோம். சில நேரங்களில் சமூக வலைதளம் மூலமாகவும் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு குடிமகனாக என்னால் முடிந்ததை நிச்சயமாகச் செய்வேன். ஆனால் மக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை. திரைப்படத்துறையில் உள்ள பலரும் விவசாயிகளின் போராட்டம் குறித்த பார்வையைப் படங்களில் பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறோம். கனா படத்திலும் அதைப் பதிவு செய்தோம்.