விபத்தில் உயிர் தப்பிய சிவகங்கை கலெக்டர்…! இருவர் படுகாயம்!

 

விபத்தில் உயிர் தப்பிய சிவகங்கை கலெக்டர்…!  இருவர் படுகாயம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி தெரிவித்துள்ளார். அதேபோல் 10 கிலோ லிட்டர் ஆக்சிஜனுடன் நல்ல நிலையில் பராமரித்து வருவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை அங்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விபத்தில் உயிர் தப்பிய சிவகங்கை கலெக்டர்…!  இருவர் படுகாயம்!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தில் தினமும் 53 கொரோனா பாசிட்டிவ் வருவதாகவும், 1500 பேருக்கு தினந்தோறும் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். நேற்று ஒரே நாளில் 428 பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுமார் 22 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

விபத்தில் உயிர் தப்பிய சிவகங்கை கலெக்டர்…!  இருவர் படுகாயம்!

இந்நிலையில் ஆய்வுக்கு பிறகு காரில் புறப்பட்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி சென்ற வாகனம் நிலை தடுமாறி மின் கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஆட்சியர் லேசான காயத்துடன் உயிர் தப்பிய நிலையில் உதவியாளர் மற்றும் ஓட்டுனர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அவர்கள் உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.