சிவகங்கை: ராணுவ வீரர் அம்மா, மனைவி படுகொலை! – முன்விரோதம் காரணமா?

சிவகங்கை மாவட்டத்தில் ராணுவ வீரரின் அம்மா மற்றும் மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையாளர்கோவில் அருகே உள்ள முக்கூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சந்தியாகு. இவரது மனைவி ராஜகுமாரி (60). இவர்கள் மகன் ஸ்டீபன். தற்போது ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சினேகா (30). இதனால் வீட்டில் சந்தியாகு, ராஜகுமாரி, சினேகா ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

நேற்று இரவு சந்தியாகு தோட்டத்தின் காவல் பணிக்காக சென்றிருந்தார். இன்று காலை வீட்டுக்கு வந்த போத சினேகா மற்றும் ராஜ்குமாரி ஆகியோர் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தனர். வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து உடனடியாக அவர் காளையார்கோவில் போலீசில் தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தார்.

சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் தடயவியல் துறையினர், மோப்பநாய் உதவியோடு ஆய்வு நடத்தப்பட்டது. கொள்ளையடிக்க வந்தவர்கள் கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வேறு ஏதாவது முன்விரோத பிரச்னை காரணமாக கொலை செய்துவிட்டு போலீசை திசை திருப்ப கொள்ளை நடந்தது போல காட்டியுள்ளார்களா என்று விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ராணுவ வீரரின் தாய், மனைவி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக 14 ஆம் தேதி நீர் திறப்பு : முதல்வர் பழனிசாமி

பவானி சாகர் அணையில் இருந்து 14 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையிலிருந்து வரும் 14 ஆம் தேதி முதல் பாசனத்திற்காக தண்ணீர்...

உயிரை காப்பாற்ற வேண்டிய நர்ஸ் உயிரை எடுத்தார் -ஒரே குடும்பத்தை சேர்ந்த பத்து பேரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நர்ஸ்

  ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஒரே குடுமபத்தை சேர்ந்த 11 பேர் கடந்த 2015ம் ஆண்டு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு வந்து ராஜஸ்தான் மாநிலத்தில் குடியேறினார்கள் .அவர்களில் ப்ரியா என்ற பெண் மட்டுமே...

`2 நாள் பொறுத்துக்கொள்; செல்போன் வாங்கித் தருகிறோம்!’- ஆன்லைன் வகுப்பு தடைபட்டதால் பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்காததால் வேதனை அடைந்த பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், பூத்தபேடு, ஏழுமலை தெருவைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி...

அபினை காரில் கடத்திய பெரம்பலூர் பாஜக துணை தலைவர் கைது!

திருச்சியிலிருந்து 4.50 லட்சம் மதிப்புள்ள அபினை காரில் கடத்திய நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியிலிருந்து 4.50 லட்சம் மதிப்புள்ள அபினை காரில் கடத்திய பெரம்பலூர் மாவட்ட பாஜக துணை தலைவர் அடைக்கலராஜ் உள்ளிட்ட 5...
Do NOT follow this link or you will be banned from the site!