“இந்தியாவின் நிலை இதயத்தை நொறுக்குகிறது” – உலகச் சுகாதார அமைப்பு வேதனை!

“இந்தியாவின் நிலை இதயத்தை நொறுக்குகிறது” – உலகச் சுகாதார அமைப்பு வேதனை!

கொரோனா இரண்டாம் அலையால் இந்தியா சின்னாபின்னாமாகியுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடெங்கும் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசோ நிலைமை கைமீறி சென்றுவிட்டது; மக்கள் அனைவரும் எதையும் எதிர்கொள்ள துணிவுடன் இருங்கள் என்று கையை விரித்துவிட்டது. டெல்லி, மகாராஷ்டிரா மாநில அரசுகள் ஆக்சிஜனுக்காக மற்ற மாநிலங்களிடம் உதவி கோரியிருக்கின்றன.

“இந்தியாவின் நிலை இதயத்தை நொறுக்குகிறது” – உலகச் சுகாதார அமைப்பு வேதனை!

இக்கட்டான சூழலில் இந்தியாவுடன் துணை நிற்பதாக அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்த நாடுகள் மருத்துவ உபகரணங்களையும் மருந்துகளையும் அனுப்பி வைப்பதாக உறுதியளித்திருக்கின்றன. தற்போது உலகச் சுகாதார அமைப்பு (WHO) இந்தியாவிற்கு உதவ முன்வந்திருக்கிறது.

“இந்தியாவின் நிலை இதயத்தை நொறுக்குகிறது” – உலகச் சுகாதார அமைப்பு வேதனை!

இது தொடர்பாக அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் பேசுகையில், “இந்தியாவின் கொரோனா தொற்று நிலவரம் இதயத்தை நொறுக்குகிறது. ஏன் அதைத் தாண்டியும் கவலைப்படும் விதமாக இந்தியாவின் நிலைமை இருக்கிறது. அண்மைக்காலமாக அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மருந்து, மருத்துவ உபகரணங்கள் வேண்டி சமூகவலைதளங்களில் மன்றாடுவதும் மிகுந்த கவலையளிக்கிறது.

“இந்தியாவின் நிலை இதயத்தை நொறுக்குகிறது” – உலகச் சுகாதார அமைப்பு வேதனை!

இந்தியாவிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உலகச் சுகாதார அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அவசர கால தேவைக்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்களை அனுப்பிவைக்கிறது. போலியோ ஒழிப்பு, காசநோய் ஒழிப்புத் திட்டங்களில் பணியாற்றிவந்த நிபுணர்களை இந்தியாவிற்கு உதவியாக அனுப்பியுள்ளது” என்றார். கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய அதனோம், ஒரு வைரஸ் எப்பேர்பட்ட பேரழிவை உருவாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று என்று கூறியிருந்தார்.