சிட்டி நெட்வொர்க்ஸ் நிறுவனத்துக்கு ரூ.46 கோடி நஷ்டம்..

 

சிட்டி நெட்வொர்க்ஸ் நிறுவனத்துக்கு ரூ.46 கோடி நஷ்டம்..

2020 ஜூன் காலாண்டில் சிட்டி நெட்வொர்க்ஸ் நிறுவனத்துக்கு ரூ.45.81 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எசெல் குழுமத்தை சேர்ந்த மற்றும் கேபிள் டி.வி. விநியோக நிறுவனமான சிட்டி நெட்வொர்க்ஸ் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் சிட்டி நெட்வொர்க்ஸ் நிறுவனத்துக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.45.81 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சிறிது குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனத்துக்கு ரூ.49.48 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

சிட்டி நெட்வொர்க்ஸ் நிறுவனத்துக்கு ரூ.46 கோடி நஷ்டம்..
சிட்டி நெட்வொர்க்ஸ்

2020 ஜூன் காலாண்டில் சிட்டி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.382.84 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் சிட்டி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.394.67 கோடியாக உயர்ந்து இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று சிட்டி நெட்வொர்க்ஸ் நிறுவன பங்கின் விலை 4.89 சதவீதம் குறைந்து ரூ.1.75ஆக சரிந்தது.

சிட்டி நெட்வொர்க்ஸ் நிறுவனத்துக்கு ரூ.46 கோடி நஷ்டம்..
சிட்டி நெட்வொர்க்ஸ்

சிட்டி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனில் மல்ஹோத்ரா கூறுகையில், கோவிட்-19 தொற்றுநோயின் உலகளாவிய தாக்கத்தை கருத்தில் கொண்டு நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் முதல் காலாண்டில் நகர்புற மக்கள் இடம் பெயர்ந்தது, கிழக்கு இந்தியாவின் எங்களது வலுவான பிராந்தியத்தில் ஆம்பன் சூறாவளி தாக்கியது எங்களது வணிகத்தையும் பாதித்தது என தெரிவித்தார்.