காதல் திருமணம்… வரதட்சணையாக வீடு… 40 பவுன் கேட்டு தங்கச்சிக்கு டார்ச்சர்!- வீடு புகுந்து புதுமாப்பிள்ளையின் தாய், நண்பனை வெட்டிக் கொன்ற அண்ணன்

தங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட வாலிபருக்கு வரதட்சணையாக வீடு கொடுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 40 பவுன் நகைக் கேட்டு காதலி மனைவியை டார்ச்சர் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன், வீடு புகுந்த தங்கையின் மாமியார், நண்பனை வெட்டுக் கொன்றார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அடுத்து உள்ளது சிவகளை. இந்த ஊரைச் சேர்ந்தவர் விக்னேஷ் ராஜா. இவர் மூன்றாம் ஆண்டு பொறியியல் கல்லூரி படித்து வருகிறார். அருகில் உள்ள பொட்டல் கிராமத்தில் நடந்த திருவிழாவுக்கு விக்னேஷ் ராஜா சென்றுள்ளார். அப்போது, சங்கீதா என்ற பெண் மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதல் பல ஆண்டுகளாக தொடர்ந்துள்ளது. இவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால், விக்னேஷ் ராஜா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். சங்கீதாவின் பெற்றோர் அரசு ஊழியர்கள். இதனால் மகளின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த எதிர்ப்புக்கு மத்தியில் விக்னேஷ் ராஜா- சங்கீதா திருமணம் நடந்துள்ளது.

ஒரு கட்டத்தில் மகளை சேர்த்துக் கொண்டனர் சங்கீதாவின் பெற்றோர். ஆனால், சங்கீதாவின் அண்ணன் முத்துராமலிங்க ராஜாவுக்கு தங்கை காதல் திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை. இருந்தாலும் காதல் ஜோடியை சங்கீதாவின் பெற்றோர் ஏரலில் உள்ள வீட்டில் தங்கவைத்துள்ளனர். இந்த நிலையில், விக்னேஷ் ராஜா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த முத்துராமலிங்க ராஜா, உறவினர் முத்துச்சுடர், நண்பர் அருணாச்சலம் ஆகியோர் விக்னேஷ் ராஜாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை தடுத்த தாய் முத்துபேச்சி, தந்தை லட்சுமணன், நண்பர் அருண் மகேஷ் ஆகியோரையும் வெட்டியுள்ளனர்.

இதில் முத்துபேச்சி, அருண் மகேஷ் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த விக்னேஷ் ராஜா, அவரது தந்தை லட்சுமணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் 24 மணி நேரத்தில் முத்துராமலிங்க ராஜா, உறவினர் முத்துச்சுடர், நண்பர் அருணாச்சலம் ஆகியோரை கைது செய்தனர்.

அப்போது, முத்துராமலிங்க ராஜா நடத்தப்பட்ட விசாரணையில், எனது தங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் ராஜாவுக்கு எங்கள் வீட்டை வரதட்சணையாக கொடுத்துவிட்டோம். அப்படி இருந்தும் 40 சவரன் கேட்டு தங்கையை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த ஆத்திரத்தில் வீடு புகுந்து வெட்டினோம்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...