முதல் மனைவியுடன் விவாகரத்து; இரண்டாவது திருமணம் செய்த அஜித் பட நடிகர்…!

 

முதல் மனைவியுடன் விவாகரத்து; இரண்டாவது திருமணம் செய்த அஜித் பட நடிகர்…!

நடிகர் பாலா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

முதல் மனைவியுடன் விவாகரத்து; இரண்டாவது திருமணம் செய்த அஜித் பட நடிகர்…!

இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா 2வது திருமணம் செய்துள்ளார் .ஏற்கனவே அம்ருதா என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு 9 வயதில் மகள் உள்ளார். இருப்பினும் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு பாலா – அம்ருதா விவாகரத்து பெற்றனர். இந்த சூழலில் நடிகர் பாலா தற்போது எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் .இதனால் சிவாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். பாலாவின் திருமண வாழ்க்கையை ஒட்டி தான் சிவா விஸ்வாசம் படம் எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

முதல் மனைவியுடன் விவாகரத்து; இரண்டாவது திருமணம் செய்த அஜித் பட நடிகர்…!

ஏற்கனவே தமிழில் அன்பு ,வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலா தற்போது சிறுத்தை சிவாவின் அடுத்த படமான அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி ,சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.