Home ஆன்மிகம் ஷீரடி திருவடி - நான் உன்னிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன ?

ஷீரடி திருவடி – நான் உன்னிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன ?

அன்பு குழந்தையே, சிறிதளவு சகிப்புத்தன்மையும், சிறிதளவு சாதூர்யமும், சிறிதளவு நகைச்சுவை உணர்வும் இருந்தாலே போதும், வாழ்க்கையை மிக அழகாக கொண்டு சென்று வெற்றி படிகட்டுகளையும், அன்பையும், அமைதியையும் அடையலாம்.

பொறுமையும் தன்னம்பிக்கையும் தான் தைரியம். அதை நீ தொலைத்துவிடாதே. எப்பொழுது நீ எந்த பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தாலும், அதை எதிர்த்து போராட கற்றுக்கொள். அப்போது அது உன்னை காப்பாற்றும். ஆனால் எது நடந்தாலும் நீ எதை செய்திருந்தாலும் அதை நீ உணரும் தருணத்தில், நான் மன்னித்து உன்னை ஆசிர்வதிப்பேன்.

சகிப்புத்தன்மை இல்லை என்றால் உன் நிலை மிகவும் கவலைக்கிடமாகும். வாழ்க்கை போகும் வழியும் மாறிவிடும். எப்போது சகிப்புத்தன்மையை மேற்கொள்கிறாயோ அப்போது வியக்கத்தக்க வகையிலான வாழ்க்கையை நோக்கி பயணத்தை துவங்குவாய். இதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு வாழ்.

நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், ஒழுக்கத்தோடும் சிறந்த நற்குணங்களோடு இருந்தாலும், வறுமையின் காரணமாக மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தாலும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனதூய்மையும், தன்னலமற்ற சிந்தனைகளும் எண்ணங்களும் இல்லை என்றால் எதையுமே நீ எதிர் கொள்ள முடியாது. சாதிக்கவும் முடியாது. மிகவும் முக்கியம் சகிப்புத்தன்மை. இதுமட்டும் உனது வாழ்கையில் இல்லாவிடில் உனது வாழ்க்கையே பரிபோய்விடும்.

ஒருவர் உன்னிடம் மரியாதைக் குறைவாக நடந்துக்கொண்டால், நீீயும் அப்படியே நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை விட்டு, அவுங்க அப்படிதான் என்று இந்த பழி வாங்கும் தன்மையை விட்டு விட்டாலே போதும். அதுபோல மற்றவர்கள் எல்லா விதத்திலும் உனது விருப்பத்திற்கு ஏற்பவே நடக்க வேண்டும் என நினைக்காமல், அவர்களுக்குரிய முறையில் அவர்கள் இருப்பார்கள் என்று ஏற்றுக்கொள்வது. உன்னைப் பற்றியான விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் சக்தியும், உன் தவறுகளை பிறர் சுட்டி காட்டும் போது, பொறுமையுடனும், பகுத்தறிவுடனும் ஏற்றுக்கொண்டு சரி செய்ய முயல்கிற தன்மையும் இருக்கும்

சகிப்புத்தன்மையே உன்னை முழுமனிதனாக வாழச்செய்கின்றது. ஒருவன் உனக்கு தீங்கு இழைக்கும் சூழலிலும், அவனை மன்னித்து அவனிடம் அன்பு செலுத்து. சகிப்புத்தன்மை, நிதானம் இல்லாதவர்களிடம் பகைமை, பொறாமை, விரோதம், காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் உணர்வு போன்றவை மிகுந்திருக்கும். சகிப்புத்தன்மை இருக்கும் இடத்தில்தான் அமைதி இருக்கும். சகிப்பு தன்மை என்பது பலவீனத்தின் அறிகுறியல்ல. பலத்தின் அடையாளம்.

நான் பக்கபலமாக இருந்தாலும் நானே அனைத்திற்கும் சர்வாதிகாரி என்றாலும் அனைத்தும் எனக்கு கட்டு பட்டு இருந்தாலும், உன்னிடம் நிலையான, உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே, நான் உன்னை அனைத்திலும் இருந்து பாதுகாக்கமுடியும்.

நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையும் உனது தைரியத்தையும் தான் உன்னிடம் இருந்து நான் எதிர்பார்க்கிறேன். தன்னம்பிக்கை இழந்து விடாதே அனைத்தும் விரைவில் மாற போகிறது. நீ என் உயிர் நான் எங்கு இருக்கிறேனோ அங்கு நீயும் இருக்கிறாய் இருப்பாய் என் உயிராய் . இனிமேல் உன் வாழ்வில் நடக்கும் எல்லாம் ஒளிரும்.

உலகத்தில் என்ன மாறினாலும் நகன்றாலும் உன்னை விட்டு ஒருபோதும் அகலமாட்டேன். உன்னோடும் உன் குடும்பத்தோடும் நான் இருக்கிறேன். நீ எல்லா செல்வ வளங்களைப் பெற்று சீரும் சிறப்புமாய் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய்..

மாவட்ட செய்திகள்

Most Popular

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் பின் தங்கிய பாஜக

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களையும் பா.ஜ.க. அல்லாத மாநிலக் கட்சிகள் பிடித்திருக்கிறது. மிகவும் பிரபலமான 10...

கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை வெல்லும் மந்திரம்!

நம்முடைய முன்னேற்றத்தைத் தடுக்க பலரும் பல முயற்சிகளை செய்கின்றனர். நம்முடைய கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை ஓரளவுக்கு எதிர்கொள்ளலாம். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை என்ன செய்வது. நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும்...

கோழி மருந்தை சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை மதுரை அருகே கோழி மருந்தை குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி...

பாஜக பொங்கல் விழா வாக்குக்காக நடத்தவில்லை- அண்ணாமலை

கோவையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை, “தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நம்ம ஊர் பொங்கல்...
Do NOT follow this link or you will be banned from the site!