‘பிக் பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுக்கும் பாடகி சுசித்ரா’.. ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்!

 

‘பிக் பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுக்கும் பாடகி சுசித்ரா’.. ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்!

பாடகி சுசித்ரா பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வது போல இன்றைய நிகழ்ச்சிக்கான 2ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4ல் முதல் வைல்ட் கார்ட் போட்டியாளராக விஜே அர்ச்சனா எண்ட்ரி கொடுத்தார். அப்போது தான் விளையாட்டு தொடங்கியது என்றே சொல்ல வேண்டும். போட்டி தொடங்கி 10 நாட்கள் ஆகியும் எந்த விஷயத்திலும் பங்கேற்காமல் இருந்த போட்டியாளர்கள், நமுத்து போன பட்டாசு, காணவில்லை, பிக் பாஸ் ட்ரெண்டிங் என அர்ச்சனா கொடுத்த பெயர் பலகைக்கு பிறகு ஆளாளுக்கு முந்தியடிக்க தொடங்கினர்.

‘பிக் பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுக்கும் பாடகி சுசித்ரா’.. ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்!

வெளியே இருந்து நிகழ்ச்சியை பார்த்ததால் அர்ச்சனாவுக்கு பல விஷயங்கள் தெரியும் என, ஹவுஸ்மேட்ஸ் அர்ச்சனாவுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் குரல் ஓங்கியே இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் பாடகி சுசித்ரா எண்ட்ரி கொடுப்பது போல இன்றைய நிகழ்ச்சிக்கான 2ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.

‘பிக் பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுக்கும் பாடகி சுசித்ரா’.. ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்!

கடந்த சில நாட்களாக பாடகி சுசித்ரா, பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே செல்லவிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது. புரோமோவில், ‘சற்றும் எதிர்பாராத விதமாக உள்ளே செல்கிறீர்கள் என கமல்ஹாசன் சொல்ல, இந்த சீசன் ரொம்ப கடுமையாகவே இருப்பதாக தோணுது. உள்ளே போய் எல்லாத்தையும் ஒரு உலுக்கு உலுக்குவோம் என பதில் அளிக்கிறார்.

‘பிக் பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுக்கும் பாடகி சுசித்ரா’.. ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்!

பிறகு மியாவ் மியாவ் பூன பாடலுடன் சுசித்ரா வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்க, ஹவுஸ்மேட்ஸ் ஷாக் ஆவது போல புரோமோ முடிகிறது. எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்ற வாசகத்துக்கு ஏற்றவாறு பார்வையாளர்களுக்கு பல ட்விஸ்ட்களை கொடுத்து வருகிறார் பிக்கி. இனி என்ன நடக்கப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.