அரசு இசை பள்ளிக்கு பாடகர் எஸ்பிபியின் பெயர்!

 

அரசு இசை பள்ளிக்கு பாடகர் எஸ்பிபியின் பெயர்!

நெல்லூரில் உள்ள அரசு பள்ளிக்கு மறைந்த பாடகர் எஸ்பிபி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அரசு இசை பள்ளிக்கு பாடகர் எஸ்பிபியின் பெயர்!

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 20 ஆம் தேதி உயிரிழந்தார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், கொரோனா குணமாகியும், உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி பலியானார். எஸ்பிபியின் இறப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை கொடுத்தது. 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள், நடிப்பு, தயாரிப்பாளர் என ஜொலித்த எஸ்பிபியின் பாடல்கள் தினமும் ஒலித்து கொண்டு தான் இருக்கிறது.

அரசு இசை பள்ளிக்கு பாடகர் எஸ்பிபியின் பெயர்!

இந்நிலையில் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் உள்ள அரசு இசை மற்றும் நடன பள்ளியின் பெயரை டாக்டர். எஸ்.பி. பாலசுப்ரமணியம் அரசு இசை மற்றும் நடன பள்ளி என பெயர் மாற்றியுள்ளதாக அம்மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மேகபதி கெளதம் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த எஸ்பிபி நெல்லூரில் 1946 ஆம் ஆண்டு பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.