‘ஜானகி அம்மா நல்லா இருக்காங்க… வதந்திகளைப் பரப்பாதீங்க’ எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வீடியோ!

திரையிசை பாடகர் எஸ்.ஜானகி மரணம் என்ற வதந்தியை சமூக ஊடங்களில் செய்தி வந்ததது. அவரின் ரசிகர்கள் அதை நம்பி வருத்ததோடு தங்கள் கருத்துகளைப் பதிந்துவந்தார்கள். ஆனால், உண்மையில், எஸ்.ஜானகி ஆரோக்கியமாக இருக்கிறார் என்று பலரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழ்த் திரையிசை மட்டுமல்ல, இந்திய திரையிசையில் தம் இனிய குரலால் எண்ணற்ற ரசிகர்களை ஈர்த்தவர் பாடகி எஸ்.ஜானகி. பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். நான்கு முறை சிறந்த பாடகர் என தேசிய விருது பெற்றவர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திர அரசுகளின் மாநில விருதுகளைப் பலமுறை பெற்றவர். இசை மட்டுமே தம் மூச்சு என வாழ்ந்துவருபவர். 2013 ஆம் ஆண்டு இவரைத் தேடி பத்மபூஷன் விருது வந்தபோது மிகத் தாமதமாகக் கொடுக்கப்படுகிறது என்று அதை நிராகரித்த சுயமரியாதை மிக்கவர். எல்லாவற்றையும் மீறி இன்றுவரை லட்சக்கணக்கான ரசிகர்களின் விருப்பத்துக்கு உரிய பாடகர்.

புகழ்பெற்றவர்களுக்கு நேரும் சில சங்கடங்கள் எஸ்.ஜானகிக்கும் நேர்ந்தது. அவர் இறந்துவிட்டதாக வதந்தி அவ்வப்போது சமூக ஊடகங்களில் எழும். அது பொய் என நிருபிக்கப்படும். இப்போதும் அப்படித்தான் எஸ்.ஜானகி இறந்துவிட்டார் எனப் பரவிய வதந்திக்கு, அவரின் மகன் முரளி கிருஷ்ணா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘அம்மா நலத்துடன் இருப்பதாகவும் பொய்களைப் பரப்ப வேண்டாம்’ என்று கேட்டிருந்தார்.

திரைத்துறை சார்ந்த பலரும் இச்செய்தி வதந்தி என்று அறியாது தவித்துவிட்டனர். பிரபல பாடகரும் எஸ்.ஜானகியுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியவருமான எஸ்.பி.பாலசுப்பிரமனியன் உடனே எஸ்.ஜானகியைத் தொடர்புகொண்டு நலம்ம் விசாரித்திருக்கிறார். உடனே ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்.

அதில், “ஜானகி அம்மாவிடம் பேசினேன். அவங்க ரொம்ப நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். மக்கள் என்றென்றும் விரும்பும் கலைஞர் ஜானகி அம்மா. அவரைப் பற்றிய வதந்திகளைப் பராப்பாதீங்க. அவர் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ்வார். சோஷியல் மீடியாவை நல்ல விஷயங்களுக்குத் தயவுசெய்து பயன்படுத்துங்கள்’ என்று கூறியிருந்தார்.

Most Popular

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து...

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ராஜ்பவனில் நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான...

இன்று 5,609 பேருக்கு கொரோனா… இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்சமாக 109 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 58,211 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.63 லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்படுவோர்கள் மற்றும்...