சிங்கப்பூரிலும் உருமாறிய கொரோனா வைரஸ் : அச்சத்தில் மக்கள்!

 

சிங்கப்பூரிலும் உருமாறிய கொரோனா வைரஸ் : அச்சத்தில் மக்கள்!

பிரிட்டனிலிருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் B- 117 பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலும் உருமாறிய கொரோனா வைரஸ் : அச்சத்தில் மக்கள்!

பிரிட்டனில் உருமாற்றமடைந்த வீரியமிக்க கொரோனா பரவி வருகிறது. இது முந்தைய கொரோனாவை விட 70% அதிவேகமாக பரவ கூடியது. பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் 744 பேர் பலியானதையடுத்து இன்று ஒரே நாளில் 39,237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பிரிட்டனில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,49,551 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் அங்கு இதுவரை இதுவரை 69,051 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிங்கப்பூரிலும் உருமாறிய கொரோனா வைரஸ் : அச்சத்தில் மக்கள்!

இந்நிலையில் பிரிட்டனிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய 17 வயது மாணவிக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு உருமாறிய கொரோனா B-117 இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர்கள் மேலும் 11 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.