பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில் மகன் பிறந்ததால் சிறிது யோசிக்காமல் அந்த குழந்தைக்கு கிருஷ்ணா என்று பெயர் சூட்டினார். முதலில் அவரது குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இருப்பினும் பின்னர் கிருஷ்ணா பெயரை ஏற்றுக்கொண்டனர்.

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை

இந்த சம்பவம் நடந்தது 12 ஆண்டுகளாகி வி்ட்டது ஆஜிஸ் கான் தனது மகனின் பெயரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றவில்லை. இது தொடர்பாக ஆஜிஸ் கான் கூறுகையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு 2008 ஆகஸ்ட் 23ம் தேதியன்று எனது மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். விண்ணப்பத்தை நிரப்புவதற்காக டாக்டர் பிரவீன் ஜாடியா குழந்தையின் பெயர் என்னவென்று கேட்டார், அன்று ஜென்மாஷ்டமி என்பதால் உடனடியாக நான் கிருஷ்ணா கூறினேன்.

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை

மருத்துவர்கள் மற்றும் எனது குடும்பத்தினர் கிருஷ்ணா என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தந்தைக்கு குழந்தைக்கு பெயர் வைக்க உரிமை உண்டு என அவர்களிடம் தெரிவித்தேன். முதலில் எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள் பின்னர் சமாதானமாகி அந்த பெயரை ஏற்றுக்கொண்டனர் என தெரிவித்தார். அஜிஸ் கான் தனது மகனுக்கு கிருஷ்ணா என பெயர் வைத்தது நம் நாட்டு மக்களின் மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.