‘கேன்சரால் அவதிப்படும் நடிகர் தவசிக்கு’ சிம்பு நிதியுதவி!

 

‘கேன்சரால் அவதிப்படும் நடிகர் தவசிக்கு’ சிம்பு நிதியுதவி!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், இவர் அழகர் சாமியின் குதிரை, நான் கடவுள், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் தவசி. இவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது காலம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், அவருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது உறுதியானது.

‘கேன்சரால் அவதிப்படும் நடிகர் தவசிக்கு’ சிம்பு நிதியுதவி!

முறுக்கு மீசையுடன் திரைப்படங்களில் வலம் வந்த தவசி தற்போது உடல் மெலிந்து பரிதாப நிலையில் இருக்கிறார். அவரது சிகிச்சைக்கு போதிய பண வசதி இல்லாததால், உதவி கேட்டு இணையதளங்களில் செய்திகள் பரவின. அதன் படி நடிகர் சிவகார்த்திகேயன், சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் பண உதவி செய்தனர்.

‘கேன்சரால் அவதிப்படும் நடிகர் தவசிக்கு’ சிம்பு நிதியுதவி!

இதனிடையே திமுக எம்எல்ஏ சரவணன் தனது மருத்துவமனையில் தவசியை அனுமதித்து, முழு சிகிச்சை செலவையும் அவரே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், தவசிக்கு நடிகர் சிம்பு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.