கடன் தொல்லையால், நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

 

கடன் தொல்லையால், நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

திருவண்ணாமலை

ஆரணி அருகே கடன் தொல்லையால் நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணமாலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (40). பட்டு நெசவு தொழிலாளி. இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிவகுமார் குடும்ப செலவிற்காக, ஆரணி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த நபரிடம் ரூ.20 ஆயிரம் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார்.

கடன் தொல்லையால், நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

மேலும், அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடமும் கடனுக்கு பணம் வாங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக, அவர் கடனுக்கு சரிவர வட்டி செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதனால், நேற்று முன்தினம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு சிவகுமாருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர், அன்று மாலை வீடடில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் ஆரணி நகர போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.