மன பலவீனம் அகற்றும் மெளன விரதம்!

 

மன பலவீனம் அகற்றும் மெளன விரதம்!

மனம் என்பது ஒரு கோளம் போன்றதாகும். நம் மனதில் நிறைய சுழற்சிகள் உண்டு. தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே, தன்னுடைய நல்ல காரியங்களுக்கு யாரும் உதவியாக இல்லையே..! என் மனசை யாரும் புரிஞ்சுக்காமா பேசுறாங்களே என வெளியில் சொல்லமால் தவிப்பவர்களுக்கு மெளன விரத சக்திகள், மகத்தான முறையில் உதவி புரியும். கோயில்களில் ஒவ்வொரு சன்னிதிக்கும் தனித் தனி விமானம் இருப்பதைப் பார்க்கலாம். விமானத்தையே கும்பம் என்றும் மூலவரைக் கும்ப சக்தி எனவும் அழைப்பர்.
கும்பகோணம் அருகே இன்னம்பூர்த் திருத்தலத்தில் ஆதி மூலக் கும்ப சக்தியாகிய மூலக் கருவறையில் ஆதிசிவனே அகத்தியருக்கு இலக்கண சக்திகளை போதித்தமையாலும் கும்ப முனிவர் எனப் பெயரைப் பெற்றார். கும்பத்தில் பிறந்தவர், மனித உடலின் கும்ப சக்திகள் பொதிந்த கபால அறிவு சக்திகளை இன்னம்பூரில் அமுதமாக்கிய மாமுனி ஆதலினும் கும்பமுனி ஆனார்.

மன பலவீனம் அகற்றும் மெளன விரதம்!
மன பலவீனம் அகற்றும் மெளன விரதம்!

நம் மனதிலும் நிருதி மூலை, சனி மூலை, கன்னி மூலை என எட்டு மூலைகள் உண்டு. இதில் சிவந்த நிற மங்கள மன பூமியே மனச் சாந்தத்தை அக்னிப் பூர்வமாக அளிப்பதாகும்.

0 R

திங்கட் கிழமைகளில் மண் பானை அல்லது வெங்கலப் பானையில் சமைத்த உணவைப் படைத்து உண்ணுதல், பல விமானங்கள் உள்ள ஆலய தரிசனம், மெளன விரத சக்திகளைத் தருவதாகும்.

சென்னை அருகே உள்ள திருமழிசை சிவாலயத்தில் கஜபிருஷ்ட விமானம் போன்ற வகையில் ஐந்து வகைக்கு மேலான விமானங்கள் உள்ள ஆலயமாகும். திருச்சி அருகே நெடுங்களம் சிவாலயம் காசியைப் போல் இரட்டை விமானம் கொண்டது.

மன பலவீனம் அகற்றும் மெளன விரதம்!

எனவே திங்கட் கிழமைகளில் கும்ப சக்திகளைப் பெற மௌன விரதமிருந்து, பல்வகை விமான தரிசனத்தை பெறலாம். மனவளம் பெற உதவும். மன பலவீனத்தை அகற்றயும் மெளன விரதம் உதவுகிறது.

-வித்யா ராஜா