இன்ஸ்டாகிராமில் நடிகர் சிம்பு! பிரபல நடிகையால் பின் தொடரப்படுகிறார்…

 

இன்ஸ்டாகிராமில் நடிகர் சிம்பு! பிரபல நடிகையால் பின் தொடரப்படுகிறார்…

நடிகர் சிம்புவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவர் படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் அவருக்கான ரசிகர் கூட்டம் எப்போதும் அவரை பின்தொடர்ந்தபடியே இருக்கும். ஆண்டிற்கு ஒருபடம் என்ற கணக்கில் கடந்த 2019 ஆண்டு வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு அவரின் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாநாடு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார் சிம்பு. இருப்பினும் அதுவும் கொரோனா காலத்தில் தடைபட்டு போனது.

இன்ஸ்டாகிராமில் நடிகர் சிம்பு! பிரபல நடிகையால் பின் தொடரப்படுகிறார்…

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் தனது பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கவுள்ளதாகவும், ட்விட்டர், ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் கணக்கு தொடங்கும் திட்டம் உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் முதற்கட்டமாக இன்று இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கியுள்ளார். silambarasantrofficial என்ற ஐடியில், சிலம்பரசன் டிஆர் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கியுள்ளார். தொடங்கிய அடுத்த நிமிடமே நடிகை ஐஸ்வர்யா தத்தா சிலம்புவை பின் தொடர்கிறார். இதுவரை சிம்புவை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.