நிம்மதியாக இருந்த சிக்கிம் மாநிலத்துக்குள் நுழைந்த கொரோனா வைரஸ்..

 

நிம்மதியாக இருந்த சிக்கிம் மாநிலத்துக்குள் நுழைந்த கொரோனா வைரஸ்..

நாடே கொரோனா வைரஸால் படாதபாடு பட்டு வரும் வேளையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் மட்டும் ஒருவர் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக திகழ்ந்த சிக்கம் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை. தற்போது சிக்கிம் இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிம்மதியாக இருந்த சிக்கிம் மாநிலத்துக்குள் நுழைந்த கொரோனா வைரஸ்..

சிக்கிம் சுகாதார செயலாளர் டாக்டர் பி.டி. பூட்டியா இது தொடர்பாக கூறியதாவது: தெற்கு சிக்கிமை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. அந்த இளைஞர் கடந்த 17ம் தேதியன்று டெல்லியிலிருந்து ஒரு தனியார் பஸ்சில் சிலிகுரி வரை வந்தார். பின் அங்கியிருந்து என்.எஸ்.டி. பஸ் வாயிலாக மெல்லி செக்போஸ்ட்டுக்கு கடந்த 19ம் தேதி வந்து சேர்ந்தார். தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு தனிமைப்படுத்துதல் மையத்தில் வைக்கப்பட்டு இருந்தார். அந்த பஸ்சில் மொத்தம் 12 பேர் வந்துள்ளனர்.

நிம்மதியாக இருந்த சிக்கிம் மாநிலத்துக்குள் நுழைந்த கொரோனா வைரஸ்..

கடந்த 21ம் தேதியன்று அந்த இளைஞருக்கு காய்ச்சல் மற்றும் குளிர் ஏற்பட்டது. இதனையடுத்து அடுத்த நாள் காலையில் கோவிட்-19 எஸ்.டி.என்.எம். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உடனடியாக ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இருப்பினும் இதனை மேலும் உறுதி செய்ய சிலிலிகுரியில் உள்ள மருத்துவமனைக்கு இளைஞரின் மாதிரிகள் அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் இன்று (நேற்று) மதியம் 3.30 மணிக்கு வந்தது. அதிலும் கொரோனா இருப்பது உறுதியானது. இளைஞருடன் பயணம் செய்த சக பயணிகளும் தற்போது தனிமைப்படுத்துதல் மையங்களில் உள்ளனர். பஸ் டிரைவருடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கும் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.