Home ஆன்மிகம் சிவபெருமானுக்கு உரிய திங்கட்கிழமை விரதம்!

சிவபெருமானுக்கு உரிய திங்கட்கிழமை விரதம்!

கடவுளுக்கு மரியாதை செலுத்த, அவரை நினைத்து, அவரை பிரார்த்தித்து உணவை முழுவதுமாகவோ, சில வகை உணவைத் தவிர்த்தோ மேற்கொள்வதை விரதம் என்று சொல்கிறோம். விரதம் இருப்பது உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளைத் தரலாம். இறை அருளை வேண்டி விரதம் இருப்பது கடவுளின் பரிபூரண அன்பை, அவரது வரங்களைப் பெற்றுத் தர உதவும் என்று மதங்கள் கூறுகின்றன.

சிவபெருமானுக்கு உரிய திங்கட்கிழமை விரதம்!
சிவபெருமானுக்கு உரிய திங்கட்கிழமை விரதம்!

திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாகக் கருதப்படுகிறது. திங்கட்கிழமைகளில் விரதம் இருப்பது சிவபெருமானின் அருளைப் பெற உதவும் என்று நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் சிறந்தது என்று கூறப்படுகிறது. திருமணத்துக்காக, குடும்ப மகிழ்ச்சிக்காக, உடல் நலனுக்காக, வளர்ச்சி பெறுவதற்காக, செல்வச் செழிப்பு பெற, ஒட்டுமொத்த மகிழ்ச்சி பெற இன்றைய நாளில் விரதம் இருக்கலாம்.

திங்கட்கிழமை விரதத்தைக் காலையிலேயே தொடங்கிவிட வேண்டும். காலையில் எழுந்து சிவபெருமானை வணங்கி அன்றைய நாளைத் தொடங்க வேண்டும். அதன் பிறகு குளித்து காலைக்கடன்களை முடித்து சிவபெருமான், பார்வதி தேவியை நோக்கி பிரார்த்தனைகளைச் சொல்ல வேண்டும். பூஜை செய்யும் போது வெள்ளை ஆடைகளை அணிய வேண்டும்.

காலை மற்றும் பகல் முழுவதும் எதையும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். மாலை, சூரியன் மறைந்த பிறகு உணவு உட்கொள்ளலாம். விரதம் முடித்துவிட்டு அதிகமாக உட்கொள்ளக் கூடாது. உப்புமா, இரண்டு இட்லி என லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது பழங்களால் ஆன சாலட் சாப்பிடலாம். நாள் முழுவதும் ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

பார்வதி தேவியர் திங்கட்கிழமையில் இப்படி விரதம் இருந்துதான் சிவபெருமானைக் கணவராக அடைந்தார் என்று சில புராணக் கதைகள் கூறுகின்றன. திருமணம் ஆகாத பெண்கள் திங்கட்கிழமை விரதம் இருந்து சிவபெருமான் போன்ற கணவரை அடையலாம்.

திங்கட்கிழமை விரதம் சந்திர பகவானின் அருளைப் பெற்றுத் தரும். ஞானம் பிறக்கும். மனதைக் கட்டுப்படுத்த, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கிடைக்கும். அத்தனைக்கும் ஆசைப்படு என்று சொல்வார்கள். ஆனால், நல்லவற்றுக்கு ஆசைப்படுவது மிகவும் முக்கியமானது. அப்படி நல்லவற்றுக்கு ஆசைப்படும் நிலையைத் திங்கட்கிழமை விரதம் அளித்து நம்மைக் காக்கும்.

சிவபெருமானுக்கு உரிய திங்கட்கிழமை விரதம்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

வருவாய் அதிகரிப்பு எதிரொலி… பாரத் போர்ஜி் லாபம் ரூ.153 கோடி….

பாரத் போர்ஜ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.153 கோடி ஈட்டியுள்ளது. வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத்...

ஆல்-ரவுண்டராக அசத்திய மேக்ஸ்வெல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்! பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 39-வது லீக் ஆட்டமானது துபாய் சர்வதேச மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.

”எடப்பாடியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்”

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக, அதிமுக தனித்து போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டணி கட்சிகளான பாஜகவும் அதிமுகவும் தனித்து போட்டியிடுகிறது. பிரச்சார வாகனத்தில் கூட்டணி கட்சியின் கொடிகள் இல்லாமலும், பொதுமக்களிடம் பரப்புரை நோட்டீஸ் கொடுக்காமலும் பாஜகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்
TopTamilNews