குடகனாற்றில் நீர்திறக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

 

குடகனாற்றில் நீர்திறக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

திண்டுக்கல்

குடகனாற்றில் தண்ணீர் திறக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்தில் இருந்து குடகனாறு பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுதொடர்பாக ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி தலைமையிலான குழு, அறிக்கை சமர்ப்பிக்க காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், குடகனாறில் விரைந்து தண்ணீர் திறக்க கோரியும் அனுமந்தராயன் கோட்டை, மைலாப்பூர், பித்தளைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடகனாற்றில் நீர்திறக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

அப்போது, குடகனாறு நீர்பங்கீட்டை அமல்படுத்தக் கோரியும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து, போராட்டக்குழு பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 2 நாட்களில் குடகனாறில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதிஅளித்தார். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.