’சித்தீ’ இது அமெரிக்காவின் கமலா ஹாரீஷ் வெர்ஷன்!

 

’சித்தீ’ இது அமெரிக்காவின் கமலா ஹாரீஷ் வெர்ஷன்!

இன்னும் சில மாதங்களில் அமெரிக்காவின அடுத்த தேர்தல் நடக்க விருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியாகிவிட்டது.

’சித்தீ’ இது அமெரிக்காவின் கமலா ஹாரீஷ் வெர்ஷன்!

இந்நிலையில் ஜோ பிடன், துணை அதிபராகப் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்திருக்கிறார். இது பலருக்கும் ஆச்சர்யம். உலகின் பலமூலைகளிலிருந்தும் பலர் தங்களது பாராட்டுகளை கமலாவுக்குத் தெரிவித்து வருகிறார்கள்.

கமலா கடந்த அதிபர் தேர்தலில் இவரும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். கலிஃபோர்னியாவின் செனட்டராக தற்போது பதவி வகிக்கிறார்.

’சித்தீ’ இது அமெரிக்காவின் கமலா ஹாரீஷ் வெர்ஷன்!

கமலா ஹாரீஸ் சென்னையைச் சேர்ந்த பெண் என்பது வியப்புக்கு உரிய செய்தி. இவரின் அம்மா ஷியமளா கோபாலன் இந்தியாவை அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர். அப்பா டொனால்டு ஹாரிஸ், ஜமைக்காவைச் சேர்ந்தவர். கமலாவும் சென்னையில் வளர்ந்திருக்கிறார்.

சென்னையை ரொம்பவே விரும்புபவர் கமலா ஹாரீஸ். சென்னை வரும்போதெல்லாம் தாத்தாவோடு சென்னை கடற்கரையில் உலாவியதையும் தமிழ்நாட்டு இட்லியைப் பற்றியும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார் கமலா.

இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக பொதுமக்களிடம் உரையாற்றினார் கமலா ஹாரீஸ். தற்போதைய அதிபர் ட்ரம்ப், கமலா ஹாரீஸ் அமெரிக்கர்தானா என்ற சந்தேகத்தை அவ்வப்போது எழுப்பி வருபவர். அதனால், கமலாவின் பேச்சு குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளரிடம் அதிகம் இருந்தது.

’சித்தீ’ இது அமெரிக்காவின் கமலா ஹாரீஷ் வெர்ஷன்!

கமலா ஹாரீஸ் நேரிடையாக விஷயத்திற்கு வந்தார். அதிபர் டொனால்டு ட்ரம்ப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். ட்ரம்பின் நடவடிக்கைகளால் மக்க்கள் அடைந்த துன்பங்களைப் பட்டியலிட்டார். அப்போது பேச்சின் ஊடாக, தனது சித்தி சாரதாவைப் பற்றியும் குறிப்பிட்டார். அதாவது ‘சித்தி’ எனும் தமிழ் சொல்லையே பயன்படுத்தினார்.

சட்டென்று இந்தச் சொல் வந்ததில் அமெரிக்கர்கள் குழம்பி கூகுள் ஆண்டவரின் துணையோடு அதன் அர்த்தத்தைத் தெரிந்துகொண்டனர்.

அதுமட்டுமா… ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் சித்தி ஹேஷ்டேக்காகி பிரபலமாகி விட்டது.

இந்த சித்தி, கமலா ஹாரிஸ் வெர்ஷனாகி விட்டது.