எல்லா மாவட்டங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

 

எல்லா மாவட்டங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதனால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கொடிய வகை தொற்றான கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

எல்லா மாவட்டங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

நேற்று பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்துகாந்தகஷாயம், அகஸ்திய ரசாயணம், கூஷ்மாண்ட ரசாயணம் உள்ளிட்ட ஆயுர்வேத மருந்துகளை பரிந்துரை செய்துள்ளதாகவும், இந்த மருந்துகளை அரசு சிகிச்சை மையங்களில் கட்டணமின்றி மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். மேலும், காலை மற்றும் இரவு என இருவேளை சாப்பிட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் எல்லா மாவட்டங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஹோமியோபதி மற்றும் சித்தா உள்ளிட்ட 18 மையங்களில் சிகிச்சை பெற்ற 75,000 பேர் குணமடைந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.