’வேப்பிலை, மஞ்சள், ஓமவல்லியைக் கலந்து ஆவி பிடிக்கலாம்’ சித்த மருத்துவ வழிகாட்டல்

கொரோனா சிகிச்சைக்கு அலோபதி மருத்துவம் மட்டுமல்லாமல் சித்த மருத்துவம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்டவை பரிந்துரைக்கப்படுகின்றன. கபசுரக் குடிநீரை அனைவரும் பருகலாம் என்று அரசே கூறியுள்ளது.

அந்த வகையில் அரசுத் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தஞ்சாவூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எம். வனஜா பேசுகையில் சித்த மருத்துவம் சார்ந்த வழிகாட்டலை அளித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மக்களை தேடிச்சென்று அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுகாதார நிலையங்களில் ஆயுஷ் அமைச்சகத்திற்கு உட்பட்ட சித்தமருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா மூலம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை வழங்கி வருகிறோம்.

கபசுர குடிநீர்

எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த மையங்களில் கபச்சுரம், நிலவேம்புச் சூரணம் போன்றவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். கபச்சுரக் குடிநீரை அனைவரும் பயன்படுத்த வேண்டும். இந்த குடிநீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பயன்படுத்தலாம். ஆனால் அவ்வப்போது இந்த குடிநீரை தயாரித்தே அருந்த வேண்டும். மேலும் இஞ்சி, எலுமிச்சை, மிளகு, துளசி, நெல்லிக்காய், மஞ்சள் கலந்து கொதிக்க வைத்த குடிநீரையும் மக்கள் அவ்வப்போது பயன்படுத்தலாம். அதோடு வேப்பிலை, மஞ்சள், ஓமவல்லியைக் கலந்து சுட வைத்து ஆவி பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

எளிமையாக வீட்டிலேயே செய்து குடிக்கக்கூடிய, ஆவி பிடிக்கக்கூடிய விஷயங்களைச் செய்துபார்க்கலாம். அதிலும் அரசு அதிகாரி கூறுவதால் நம்பிக்கையுடன் செய்யலாம்.

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...