சித்தராமையா உடல் நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை தகவல்.. தொண்டர்கள் நிம்மதி

 

சித்தராமையா உடல் நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை தகவல்.. தொண்டர்கள் நிம்மதி

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தது. இதனையடுத்து அவருக்கு உடனடியாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவ்வாக வந்தது. அதாவது சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

சித்தராமையா உடல் நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை தகவல்.. தொண்டர்கள் நிம்மதி

இதனையடுத்து சித்தராமையா பெங்களூருவில் உள்ள மனிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அந்த மருத்துவமனையில்தான் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் அம்மாநில சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலு மனிபால் மருத்துவமனைக்கு சென்று முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் எடியூரப்பா நலமாக இருப்பதாகவும், சித்தராமையாவுக்கு காய்ச்சல் அதிகமாக உள்ளதாகவும் அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

சித்தராமையா உடல் நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை தகவல்.. தொண்டர்கள் நிம்மதி

இந்த தகவல் காங்கிரஸ் தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், மனிபால் மருத்துவமனை சித்தராமையா நலமாக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சித்தராமையாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை மற்றும் அவரது முக்கிய அளவுருக்கள் நிலையாக உள்ளது. அவருக்கு தகுந்த சிகிச்சை தொடங்கியது மற்றும் அவர் எங்களது நிபுணர்களால் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறார். அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரது அறிகுறிகள் மேம்பட்டுள்ளன. தற்போது அவர் வசதியாக இருக்கிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் காங்கிரஸ் தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.