கர்நாடகாவில் அனைத்து மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சை இலவசம்…. சித்தராமையா வலியுறுத்தல்

கர்நாடகாவில் அனைத்து மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சை இலவசம்…. சித்தராமையா வலியுறுத்தல்

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கோவிட்-19 சிகிச்சைக்கு மாநில அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மாநில அரசால் கொரோனா சிகிக்சைக்கு ஒரு நாளைக்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த கட்டணங்களை மக்களால் எங்கே செலுத்த முடியும்.

கர்நாடகாவில் அனைத்து மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சை இலவசம்…. சித்தராமையா வலியுறுத்தல்

இந்த கட்டணங்களை பார்க்கும்போது மக்களுக்கு இதயம் நொறுங்குகிறது. மக்களின் பிரச்சினைகளில் அரசுக்கு உணர்திறன் இருக்கிறதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது? அரசு உடனடியாக கொரோனா வைரசுக்கான சிகிச்சை இலவசம் என அறிவிக்க வேண்டும் மற்றும் சிகிக்சைக்கான நிலையான விதிமுறைகளை அமைக்க வேண்டும். சிகிக்சை முறையாக நிர்வாகம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க மற்றும் பொதுமக்கள் கவலையிலிருந்து விடுபடும் சூழலை உருவாக்க வேண்டும் என நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கர்நாடகாவில் அனைத்து மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சை இலவசம்…. சித்தராமையா வலியுறுத்தல்

கர்நாடகாவில் நேற்று மட்டும் புதிதாக 322 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் தொற்று நோய்க்கு பலியாகி உள்ளனர். அம்மாநில சுகாதார துறை அறிக்கையின்படி, அம்மாநிலத்தில் இதுவரை மொத்தம் 9,721 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6,004 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். அதேசமயம் 150 பேர் பலியாகி உள்ளனர்.