மத்திய அரசிடம் ஜி.எஸ்.டி. இழப்பீடு, வெள்ள நிவாரண நிதி கேட்க கர்நாடக அரசுக்கு தைரியம் இல்லை.. சித்தராமையா

 

மத்திய அரசிடம் ஜி.எஸ்.டி. இழப்பீடு, வெள்ள நிவாரண நிதி கேட்க கர்நாடக அரசுக்கு தைரியம் இல்லை.. சித்தராமையா

மத்திய அரசிடம் ஜி.எஸ்.டி. இழப்பீடு மற்றும் வெள்ள நிவாரண நிதி கூட கேட்க தைரியம் இல்லாமல் கோழைத்தனமாக உள்ளது என கர்நாடக அரசை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நேற்று டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில் கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான அரசு கடுமையாக தாக்கி பதிவு செய்துள்ளார். சித்தராமையா டிவிட்டரில், மத்திய அரசு மாநிலங்கள் குறித்து கவலைப்படவில்லை, கர்நாடகாவின் கோழைத்தனமான பா.ஜ.க. அரசுக்கும் வெள்ள நிவாரண நிதி கேட்கவும் தைரியம் இல்லை.

மத்திய அரசிடம் ஜி.எஸ்.டி. இழப்பீடு, வெள்ள நிவாரண நிதி கேட்க கர்நாடக அரசுக்கு தைரியம் இல்லை.. சித்தராமையா
சித்தராமையா

ஜி.எஸ்.டி. இழப்பீடு கொடுக்கப்போவதில்லை என்ற மத்திய அரசின் முடிவை பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்கள் எதிர்த்துள்ளன. மாநில அரசுக்கு தைரியம் இருந்தால், கடன் வாங்கி கர்நாடகாவுக்கு ஜி.எஸ்.டி. நிதியை வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்க வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து செல்ல வேண்டும். மாநில நலன்களுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பணியை மாநில அரசு இப்போது செய்ய வேண்டும்.56 தாலுகாவில் 1,000 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, 1 ஹெக்டேர் பரப்பு அளவுக்கு பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன, கால்நடைகள் இறந்துள்ளன.

மத்திய அரசிடம் ஜி.எஸ்.டி. இழப்பீடு, வெள்ள நிவாரண நிதி கேட்க கர்நாடக அரசுக்கு தைரியம் இல்லை.. சித்தராமையா
கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா

மாநில அரசு ரூ.4 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு கூறுகிறது. மத்திய அரசு போன ஆண்டே வெள்ள நிவாரண நிதியை சரியாக தரவில்லை. ரூ.35 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டதற்கு ரூ.1,800 கோடி மட்டுமே தந்தது. முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவை தவிர மற்ற அமைச்சர்கள் யாரும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று பார்வையிடவில்லை, மக்களிடம் குறைகளை கேட்கவும் இல்லை. மாநில அமைச்சர்கள் பிரதமரை சந்தித்து கர்நாடகாவுக்கான நிதியை விடுவிக்க அவரை வற்புறுத்த வேண்டும். எனது அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது தொடர்ந்து பிரதமரை சந்தித்து மாநிலத்துக்கு நிதி கோரினேன். பிரதமரை சந்திக்க பா.ஜ.க. தலைவர்கள் பயப்படுகிறார்கள். இது கோழைத்தனமான அரசாங்கம் என பதிவு செய்து இருந்தார்.