பி.எம்.கேர்ஸ் நிதியத்தின் தணிக்கை அறிக்கையை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.. பா.ஜ.க.வுக்கு சித்தராமையா பதிலடி

பி.எம்.கேர்ஸ் நிதியத்தின் தணிக்கை அறிக்கையை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.. பா.ஜ.க.வுக்கு சித்தராமையா பதிலடி

லாக்டவுன் காலத்தில் ரூ.1 கோடி பங்களிப்பு செய்ததாக கூறிய காங்கிரசிடம் அதற்கான தணிக்கை அறிக்கை அளிக்கும்படி பா.ஜ.க. பொதுசெயலாளர் பி.எல். சந்தோஷ் கேட்டார். அதற்கு காங்கிரஸ் தலைவர் சித்தாராமையா பி.எம்.கேர்ஸ் நிதியத்தின் தணிக்கை அறிக்கையை மக்கள் பார்க்க ஆர்வமாக உள்ளதாக டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

பி.எம்.கேர்ஸ் நிதியத்தின் தணிக்கை அறிக்கையை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.. பா.ஜ.க.வுக்கு சித்தராமையா பதிலடி

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா டிவிட்டரில், லாக்டவுன் காலத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.1 கோடி பங்களிப்பு செய்தது தொடர்பான தணிக்கை அறிக்கையை பி.எல். சந்தோஷ் கேட்டுள்ளார். விவரங்களை வழங்க நாங்கள் அதை விட தயாராக இருப்போம். ஆனால் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை வழங்கிய நம் இந்தியர்கள், பி.எம்.கேர்ஸ் நிதியத்தின் தணிக்கை அறிக்கையை பார்க்க ஆர்வமாக உள்ளார்கள் என பதிவு செய்துள்ளார்.

பி.எம்.கேர்ஸ் நிதியத்தின் தணிக்கை அறிக்கையை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.. பா.ஜ.க.வுக்கு சித்தராமையா பதிலடி

சித்தராமையா மற்றொரு டிவிட்டில், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கோவிட்-19 தொடர்பாக அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினேனா என சந்தோஷ் கேள்வி எழுப்பியுள்ளார். சந்தோஷ் விதான சவுதாவில் உள்ள எனது அலுவலகத்துக்கு வந்தால் விவரங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவு செய்து இருந்தார்.