கர்நாடக பா.ஜ.க. அரசுக்கு கொரோனாவின் 3வது அலை பற்றி கவலையில்லை.. அமைச்சரவை அமைப்பதில் தீவிரம்.. சித்தராமையா

கர்நாடக பா.ஜ.க. அரசுக்கு கொரோனாவின் 3வது அலை பற்றி கவலையில்லை.. அமைச்சரவை அமைப்பதில் தீவிரம்.. சித்தராமையா

கர்நாடகாவில் கொரோனாவின் 3வது அலையை தடுப்பதே மாநில அரசின் முதன்மை பணியாகும். ஆனால் அமைச்சரவை அமைப்பதில் மட்டுமே பா.ஜ.க. அரசு மும்முரமாக உள்ளது என்று சித்தராமையா குற்றம் சாட்டினார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: மாநிலத்தில் கொரோனாவின் 3வது அலையை தடுப்பதே மாநில அரசின் முதன்மை பணியாகும். ஆனால் அமைச்சரவை அமைப்பதில் மட்டுமே அரசு மும்முரமாக உள்ளது. அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் ஏற்கனவே தொற்றுநோய் 3வது அலையை எட்டி விட்டது.

கர்நாடக பா.ஜ.க. அரசுக்கு கொரோனாவின் 3வது அலை பற்றி கவலையில்லை.. அமைச்சரவை அமைப்பதில் தீவிரம்.. சித்தராமையா
பா.ஜ.க.

அந்த மாநிலங்களிலிருந்து வருபவர்கள் மூலம் தொற்றுநோய் பரவுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. இது சம்பந்தமாக மாநிலத்தின் எல்லைகளில் அவர்கள் பரிசோதிக்கப்பட்டு, முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். நாம் ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டோம். சரியான மருத்துவமனை, படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர்.அவை மீண்டும் வருவதை தடுக்க வேண்டும். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஒரு முறை டெல்லி சென்றால் பரவாயில்லை. ஆனால் முதல்வர் ஏன் மீண்டும் மீண்டும் அங்கு செல்ல வேண்டும்?. பா.ஜ.க.வின் உயர் மட்டமும் அரசின் பிரச்சினையை புரிந்து கொள்ள வேண்டும்.

கர்நாடக பா.ஜ.க. அரசுக்கு கொரோனாவின் 3வது அலை பற்றி கவலையில்லை.. அமைச்சரவை அமைப்பதில் தீவிரம்.. சித்தராமையா
பசவராஜ் பொம்மை

பசவராஜ் பொம்மை இப்போது முதல்வராக உள்ளார். நான் அவரை விமர்ச்சிக்கவில்லை ஆனால் மாநில பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு நான் அவரை கோருகிறேன். தற்போதைய நிலைமை மேலும் ஒரு லாக்டவுன் சூழ்நிலையை உருவாக்காது என்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். தொற்றுநோய்களின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களில் 2 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இந்த வரையறையை கடந்தால் மூன்றாவது அலை தொடங்கி விட்டது என்று அர்த்தம். எனவே கர்நாடக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.