அந்த கட்சியோடு கூட்டணி வேண்டாம் என்றேன்… ஆனால் கட்சி மேலிடம் கேட்கவில்லை.. சித்தராமையா புலம்பல்

அந்த கட்சியோடு கூட்டணி வேண்டாம் என்றேன்… ஆனால் கட்சி மேலிடம் கேட்கவில்லை.. சித்தராமையா புலம்பல்

கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலை சந்தித்தது. பெரிய வெற்றியை பெறுவோம் என்ற எண்ணத்தில் இருந்த அந்த கட்சிகளுக்கு தேர்தல் முடிவுகள் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. 21 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரசும், 7 தொகுதியில் போட்டியிட்ட மதசார்ப்பற்ற ஜனதா தளமும் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

அந்த கட்சியோடு கூட்டணி வேண்டாம் என்றேன்… ஆனால் கட்சி மேலிடம் கேட்கவில்லை.. சித்தராமையா புலம்பல்

கடந்த மக்களவை தேர்தலில் கிடைத்த தோல்விக்கு மதசார்ப்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்ததே காரணம் என காங்கிரஸ் தலைவர் சித்தராமையாக தற்போது கூறியுள்ளார்.காங்கிரஸ் தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான சித்தராமையா இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதசார்ப்பற்ற ஜனதா தள வாக்குகள் நமக்கு வராது, அதுபோல் காங்கிரஸ் வாக்குகள் அந்த கட்சிக்கு போகாது என்பதால் நாம் தனியாக தேர்தலில் (நாடாளுமன்ற மக்களவை தேர்தல்) போட்டியிடுவோம் என கட்சி மேலிடத்தில் ஆலோசனை சொன்னேன்.

அந்த கட்சியோடு கூட்டணி வேண்டாம் என்றேன்… ஆனால் கட்சி மேலிடம் கேட்கவில்லை.. சித்தராமையா புலம்பல்

நான் ஒருவன் மட்டும் அந்த ஆலோசனையை சொன்னதால் கட்சி மேலிடம் அதனை கேட்கவில்லை, எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை. நாங்கள் தனியாக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் 7க்கும் அதிகமாக இடங்களில் வெற்றி பெற்று இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.