2 நாட்களில் மூட்டைக்கு ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

 

2 நாட்களில் மூட்டைக்கு ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 70% கட்டுமான பணிகள் தேக்கமடைந்துள்ளன. கட்டுமானப் பணிகளுக்கு அழைத்து வரப்பட்டு பணி செய்து வரும் வட மாநில தொழிலாளர்கள் பொதுமக்கள் காரணமாக சொந்த ஊர் சென்றுள்ளதால் வேலையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டுமான பொருட்களின் விலையும் 40% வரை உயர்ந்தது.

2 நாட்களில் மூட்டைக்கு ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

இந்நிலையில் 490 ரூபாயாக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலையானது 460 ரூபாயாகவும், ஒரு டன் கம்பியின் விலையானது 1100 ரூபாய் வரையிலும் குறைக்கப்பட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவை தெரிவித்தார்.

Image

இந்நிலையில் தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஸ்டாலினின் கோரிக்கையால் தற்போதைய விலையிலிருந்து மேலும் ரூ.25 குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 ரூபாய் குறைக்கப்பட்ட சிமெண்ட் விலை, இன்று மேலும் 25 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களில் சிமெண்ட் விலை 55 ரூபாய் சரிந்து ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.435 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.