வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ. மீது தாக்குதல்- தொழிலதிபர் கைது

 

வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ. மீது தாக்குதல்- தொழிலதிபர் கைது

கோவை

கோவையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய தனியார் மில் உரிமையாளரை போலீசார் கைதுசெய்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் பகுதியில் உள்ள புண்ணியகோடி சாலை சந்திப்பில், நேற்று உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு காரை மறிக்க முயன்றனர். ஆனால் போலீசாரை தாண்டி சென்று ஓட்டுநர் நிறுத்தினார். இதனை அடுத்து காரில் சோதனை மேற்கொண்ட போலீசார் ஆவணங்களை கேட்டபோது, ஓட்டுநர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ. மீது தாக்குதல்- தொழிலதிபர் கைது

இந்த நிலையில் காரில் அமர்ந்திருந்த அதன் உரிமையாளர் தான் அவரச வேலையாக செல்வதாக கூறி, உடனடியாக செல்ல வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, தகராறு முற்றியதால் அவர் உதவி ஆய்வாளர் மகேந்திரனை சராமாரியாக தாக்கினார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கம் வீதியை சேர்ந்த மில் அதிபர் அந்பித் ஜெயின் என்பவர் மீது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.