எஸ்ஐ தேர்வு..இறுதி கீ ஆன்சர் செல்லாது: முழு விவரம் உள்ளே!

 

எஸ்ஐ தேர்வு..இறுதி கீ ஆன்சர் செல்லாது: முழு விவரம் உள்ளே!

969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜனவரி மாதம் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் சுமார் 1.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியானது. அப்போது, 5,275 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் காப்பியடித்து தேர்ச்சி பெற்றிருப்பதால் மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி வழக்குத்தொடர்ந்தார்.

எஸ்ஐ தேர்வு..இறுதி கீ ஆன்சர் செல்லாது: முழு விவரம் உள்ளே!

அந்த வழக்கை சமீபத்தில் விசாரணை செய்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசும் சீருடை பணியாளர் தேர்வாணையம் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டனர். இந்த நிலையில் எஸ்ஐ தேர்வு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், எஸ்ஐ தேர்வுக்கு வெளியான கீ ஆன்சர் செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நிபுணர்களின் தவறான விடையால் பலருக்கான வாய்ப்புகள் பறிபோயுள்ளன என கருத்து தெரிவித்த நீதிபதிகள், 1947க்கு பின் இந்திய நாணய மதிப்பு 3 முறை மாற்றப்பட்டுள்ளதாக விடையளித்தவர்களுக்கு 0.5 மார்க் கொடுக்க வேண்டும் என்றும் அடுத்த தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் இந்த நடைமுறைகளை 2 வாரத்தில் முடிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.